விடுதலை படத்தில் சூரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? பணத்தை விட நல்ல கதாபாத்திரம் தான் முக்கியம்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள விடுதலை படத்தில் நடிக்க நடிகர் சூரி வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, கௌதம் மேனன் என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இதில், தனுஷ் பாடிய உன்னோடு நடந்த பாடலுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

வெற்றிமாறனின் விடுதலை

வெற்றிமாறனின் விடுதலை

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்டு விடுதலை என்ற படத்தை உருவாக்கி உள்ளார் வெற்றிமாறன். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இதுவரை நகைச்சுவை நடிகராக இருந்த சூரி இந்த படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

விஜய்சேதுபதி வாத்தியாராக

விஜய்சேதுபதி வாத்தியாராக

இந்த படத்தில் கான்ஸ்டபிளாக நடித்துள்ளதால், தாறுமாறாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக்குடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருந்தார். இதில் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியாராக நடித்துள்ளார். விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

யார் பிரிவினைவாதிகள்?

யார் பிரிவினைவாதிகள்?

விடுதலை திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டீசர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் வெளியான டிரைலரில் மனுஷன் பொறக்கும் போதே ஒருத்தன் மேல ஒருத்தன் கீழ ஒருத்தன் சைடுல என பிரிக்கிற நீங்க பிரிவினைவாதிகளா? இல்ல சமுதாயத்துல எல்லாருமே ஒண்ணுனு போராடுற நாங்க பிரிவினைவாதிகளா? என விஜய் சேதுபதி பேசி உள்ள வசனம், படம் எப்போது வெளியாகும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சூரியின் சம்பளம்

நடிகர் சூரியின் சம்பளம்

சூரி கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் படம் சூரிக்கு நிச்சயம் ஒரு நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றுத்தரும். இந்நிலையில், விடுதலை படத்தில் நடிகர் சூரி வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில்,சூரிக்கு ரூ. 30 லட்சம் பேசப்பட்ட நிலையில், இப்படம் இரண்டு பாகங்களாக வருவதால், சூரியின் சம்பளத்தை 40 லட்சமாக படக்குழு உயர்த்தி உள்ளது. இத்திரைப்படம் மார்ச் 31ந் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X