விஜய், த்ரிஷா மட்டுமில்லை.. கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு இந்த பிரபலமும் போயிருக்காரா?.. செம பிக்!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த டிசம்பர் 12ம் தேதி கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக்கொண்டது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் த்ரிஷா பங்கேற்றனர்.
மேலும், இயக்குநர் அட்லீ, கல்யாணி பிரியதர்ஷன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகி வருகிறது. இந்நிலையில், தற்போடு நடிகர் சூரி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் கதையின் நாயகனாக ஹாட்ரிக் அடித்த நடிகர் சூரி கீர்த்தி சுரேஷ் உடன் பல படங்களில் இணைந்து பணியாற்றிய நிலையில், அவரது திருமணத்துக்குச் சென்று வாழ்த்தியுள்ளார்.
கீர்த்தி சுரேஷுடன் சூரி: கீர்த்தி சுரேஷுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் படமாக ஆரம்பத்திலேயே அமைந்த ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து சூரி காமெடி காட்சிகளில் கலக்கியிருப்பார். அதன் பின்னர் ரெமோ மற்றும் சீமராஜா உள்ளிட்ட படங்களிலும் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திலும் கீர்த்தி சுரேஷ் மற்றும் சூரி நடித்துள்ளனர். இந்நிலையில், கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு நடிகர் சூரியும் நேரில் சென்று கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.
விஜய் முதல் த்ரிஷா வரை: கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் நடைபெற்ற நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் திருமணத்தில் பங்கேற்று அங்கே எடுத்துக் கொண்ட பல வித புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர். நடிகர் விஜய், த்ரிஷா, மாளவிகா மோகனன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெகதீஷ் பழனிச்சாமி, டிடி நீலகண்டன், சஞ்சீவ், அட்லீ, கல்யாணி பிரியதர்ஷன் என பல பிரபலங்கள் திருமணத்தில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒரு போட்டோ வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.
செல்ல தங்கைக்கு அண்ணன் சூரியின் வாழ்த்து: "என் செல்ல தங்கை மற்றும் அன்பு மாப்பிள்ளை, உங்கள் மணவாழ்வு என்றும் மகிழ்ச்சியும் நேசமும் நிரம்பி, அழகான நினைவுகளால் நிறைந்ததாய் தொடரட்டும். ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வாழ வாழ்த்துக்கள்! " என நடிகர் சூரி சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்தில் எடுத்த புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/DD5ByGJx88d/
தொடர்ந்து கதையின் நாயகன்: நடிகர் சூரி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கருடன் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தியது. கொட்டுக்காளி திரைப்படம் சூரியை சிறந்த நடிகர் என அங்கீகரித்தது. கடந்த வாரம் வெளியான விடுதலை 2 படத்திலும் சூரியின் கதாபாத்திரத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அடுத்ததாக ராம் இயக்கத்தில் வெளியாக காத்திருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் அவருக்கு ஸ்கோப் உள்ளது. மேலும், மாமன் உள்ளிட்ட சில படங்களிலும் சூரி கதையின் நாயகனாக கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள பேபி ஜான் திரைப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்த கையோடு தொடர்ந்து அந்த படத்தை புரமோட் செய்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.


Click it and Unblock the Notifications











