Soori on Goals : இலக்கில் தெளிவாக இருந்தால் போதும்.. சூரி பளிச்!

சென்னை : நடிகர் சூரி நாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் விடுதலை. இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டவர்களின் நடிப்பு ரசிகர்கள் அதிகமாக மெச்சத்தக்க வகையில் அமைந்துள்ளது.

போலீஸ் டிரைவராக படத்தில் நடித்துள்ள சூரி, அந்த கேரக்டருக்கு ஏற்றத் தேர்வு என்று அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறார். அடுத்தடுத்த 3 படங்களில் அவர் நாயகனாக கமிட்டாகியுள்ளார்.

நடிகர் சூரி

நடிகர் சூரி

நடிகர் சூரி, வெண்ணிலா கபடிக் குழு படத்தில் சூரியாக, பரோட்டா சூரியாக நடித்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவர். கோட்டை அழிங்க, முதல்ல இருந்து போட்டியை ஆரம்பிக்கலாம் என்று சூரி சொல்லும்போது, ஹோட்டல் ஊழியர்கள் மட்டுமில்லாமல் பார்த்த ரசிகர்களும் அதிர்ச்சியடையவே செய்தனர். இந்தப் படம் சூரிக்கு சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. நமக்கு சிறப்பான காமெடியனைக் கொடுத்தது.

காமெடி கலாட்டா

காமெடி கலாட்டா

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் காமெடியில் பின்னி பெடலெடுத்தார் சூரி. தன்னுடைய பாடி லேங்குவேஜ் மற்றும் டயலாக் டெலிவரியால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார். தொடர்ந்து ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து தன்னை சிறப்பான காமெடியனாக நிலை நிறுத்தினார். காமெடி களத்தில் நடித்துவந்தாலும் நேரம் வாய்க்கும் போதெல்லாம் படங்களில் தன்னுடைய கேரக்டர் ரோலையும் வெளிப்படுத்த சூரி தவறவில்லை.

நாயகனாக சூரி

நாயகனாக சூரி

இந்நிலையில் அவருக்குள் இருந்த சிறப்பான நடிகரை வெளிக் கொண்டுவந்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். குமரேசன் என்ற போலீஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் சூரியை நடிக்க வைத்து, அவர்தான் அந்த கேரக்டரை சிறப்பாக செய்ய முடியும் என்று ரசிகர்கள் எண்ணும் வகையில் அந்தக் கேரக்டரை கொண்டு வந்துள்ளார் வெற்றிமாறன். தனக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை கனகச்சிதமாக செய்துள்ளார் சூரி. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

சிறப்பான விமர்சனங்கள்

சிறப்பான விமர்சனங்கள்

படம் சிறப்பான விமர்சனங்களை மட்டுமில்லாமல் வசூலையும் குவித்து வருகிறது. எப்போதும் தன்னுடைய படங்களை சிறப்பாக கொடுக்க மெனக்கெடும் வெற்றிமாறன், இந்தப் படத்திலும் அதை சிறப்பாகவே செய்துள்ளார். இந்தப் படத்திற்காக சூரிக்கு கண்டிப்பாக விருதுகள் குவியும் என்று தற்போது கணிக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்காக சூரி சிறப்பான பல பிரமோஷன்களை செய்து வந்தார். இந்நிலையில் இலக்குகள் குறித்து அவர் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

 இலக்கு குறித்து சூரி

இலக்கு குறித்து சூரி

எதை நாம் இலக்காக நினைக்கிறோமோ அதை நம்பி 100 சதவிகிதம் அதில் முழுமையாக ஈடுபட்டால் வெற்றி நிச்சயமாக நமக்கு வசப்படும் என்று அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். யார் எப்படி சென்றாலும் நம்முடைய இலக்கில் மட்டும் நாம் தெளிவாக இருந்தாலே வெற்றி நிச்சயம் என்றும் அவர் கூறியுள்ளார். விடுதலை படம் அடுத்தடுத்த படங்களில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X