Actor Soori : சிலிர்க்க வைத்த சூரி… குவியும் பாராட்டு.. ட்விட்டரில் நன்றி!

சென்னை : விடுதலை படத்தை மகத்தான வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நடிகர் சூரி மனமார்த்த நன்றி கூறி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் விஜய்சேதுபதி, சூரி, சேத்தன், இயக்குநர் தமிழ், கௌதம் மேனன், ராஜூவ் மேனன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஜின் தங்கை ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

நடிகர் சூரி

நடிகர் சூரி

சூரியில் நடிப்பில் வெளியான விடுதலைப்படத்தில் சூரியின் நடிப்பு அனைவரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது. இத்திரைப்படத்தில் குமரேசன் என்ற கான்ஸ்டபிளாக சூரி நடித்துள்ளார். இந்த போலீஸ் கதாபாத்திரத்திற்காக உடல் உடையை குறைத்து, சிக்ஸ் பேக்குடன் சும்மா சிக்குனு மாறி உள்ளார்.

பாராட்டும்

பாராட்டும்

சூரியின் தோற்றம் மட்டும் மாறவில்லை, அவரே ஒட்டுமொத்தமாக வேறமாறி சூரியாக மாறி உள்ளார். துப்பாக்கி எடுத்துக்கொண்டு ஓடுவது, வீட்டின் மீது குதிப்பது என பல காட்சிகளில் டப்பிங்கே இல்லாமல் நடித்துள்ளார். இந்த சண்டை காட்சியில் காலில் ஆணி குத்தியும், கையில் காயம்பட்ட போதும் அதைப்பற்றி கவலைப்படாமல் அடுத்த ஷாட்டுக்கு உடனே ரெடியாக வந்ததாக படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பேட்டியில் அவரை வெகுவாக புகழ்ந்து இருந்தார்.

சிலிர்க்கவைத்த சூரி

சிலிர்க்கவைத்த சூரி

படத்தில் நடித்தவர்கள் மட்டுமில்லாமல், படம் பார்த்த ரசிகர்களும் இத்தனை நாட்கள் நாங்கள் திரையில் பார்த்த சூரி வேறு, இப்போது பார்க்கும் சூரி வேறு. ஹீரோவாக சூரியை திரையில் பார்க்கும் போது உண்மையில் சிலிர்த்துவிட்டது என சூரியின் நடிப்பை புகழ்ந்து வருகின்றனர்.

சூரி நன்றி

சூரி நன்றி

இந்நிலையில் நடிகர் சூரி, தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம். மூன்று நாட்களாக உங்கள் அன்பான வாழ்த்து வெள்ளத்தில் நனைந்து மிதந்து மகிழ்ந்து வருகிறேன். இறைவனுக்கு நன்றி. விடுதலை முதல் பாகத்தை இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள், பொதுமக்கள், சமூக வலைத்தள நண்பர்கள், அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சிரம் தாழ்ந்த நன்றி

சிரம் தாழ்ந்த நன்றி

பெரும் ஒத்துழைப்பு தந்து மக்களிடம் எங்களின் இந்த படைப்பை எடுத்துச் சென்ற பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் விடுதலை குடும்பம் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள். அடுத்த பாகத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறோம் என நடிகர் சூரி பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X