பட்டு வேட்டி சட்டையில் கலக்கும் சூரி.. வேட்டி சட்டை தாண்டா கெத்து!

சென்னை : பிரபல காமெடி நடிகர் சூரி இப்பொழுது பட்டு வேட்டி சட்டையில் கெத்தாக இருக்கின்ற புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் முதன்முறையாக ஹீரோவாகவும் நடித்து வரும் அதேசமயம் அண்ணாத்த உள்ளிட்ட பல திரைப்படங்களில் காமெடி நடிகராகவும் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு சிக்ஸ்பேக்ஸ் உடன் சூரி வெளியிட்ட புகைப்படங்கள் செம வைரலானதைத் தொடர்ந்து இப்போது பட்டு வேட்டி, பட்டு சட்டையில் நச்சுன்னு இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ஒட்டு மொத்த இணையதளத்தையும் தெறிக்க விட்டிருக்கிறார்.

தவிர்க்க முடியாத

தவிர்க்க முடியாத

வித்தியாசமான உடல்மொழி வடிவேலுவை போன்ற முக பாவனைகள் என சினிமாவிற்கு வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சூரி இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நேரம் இல்லாத

நேரம் இல்லாத

ஆரம்பத்தில் பீமா, தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் எங்கெல்லாம் முடிகிறதோ அங்கெல்லாம் தனது முகத்தை காட்டி சினிமாவில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்ற வெறியில் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்த சூரிக்கு இப்பொழுது பொழுதுபோக்க கூட நேரம் இல்லாத அளவிற்கு திரைப்படங்கள் வரிசை கட்டிக் கொண்டு நிற்கின்றன.

குடும்பங்கள் கொண்டாடும்

குடும்பங்கள் கொண்டாடும்

இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் சூரி இணையும் திரைப்படங்கள் தனிச் சிறப்பு பெற்று வெற்றி பெற்று வரும் நிலையில் சமீபத்தில் இவர்களது கூட்டணியில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் மாபெரும் வெற்றித் திரைப்படமாக பல நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்தது.

சிக்ஸ் பேக்ஸ்

சிக்ஸ் பேக்ஸ்

இதுவரை ஹீரோக்களுடன் இணைந்து காமெடி கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த நடிகர் சூரி இப்பொழுது வெற்றிமாறன் இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாகவும் நடித்து வர அதற்காக உடலை தாறுமாறாக தயார் செய்து சிக்ஸ் பேக்ஸ் முதற்கொண்டு வைத்துள்ளார்.

செம கெத்தாக

செம கெத்தாக

அடுத்த மாதம் வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் ரஜினிகாந்தின் அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் சூரியை இதுவரை மீசை தாடி இல்லாமல் மட்டுமே நாம் பார்த்து வந்த நிலையில் இப்போது மீசை தாடியுடன் செம கெத்தாக ஆளே டோட்டலாக ஹீரோ போல மாறி உள்ளார்.

தனி கெத்து தான்

தனி கெத்து தான்

இந்த நிலையில் இப்பொழுது தனது சமூக வலைதளப் பக்கங்களில் பட்டு வேஷ்டி பட்டு சட்டையுடன் கலக்கலாக போஸ் கொடுத்துக்கொண்டு " என்னதான் டி சர்ட் ஜீன்ஸ் போட்டாலும் வேட்டி சட்டை போட்டாலே தனி கெத்து தான்" என பதிவிட்டு செம கெத்தாக போஸ் கொடுத்திருக்கும் சூரியின் இந்த கெத்தான போட்டோக்கள் இப்பொழுது இணையதளத்தை கலக்கி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Read more about: soori சூரி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X