என் வாழ்வில் மிக முக்கியமான தருணம்… சூரி நெகிழ்ச்சி!
சென்னை : விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் , நடிகர் சூரி இயக்குனர் வெற்றிமாறன் நன்றி கூறி ட்வீ ட் செய்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தின் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.
அந்த போஸ்டரில், சூரி போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி கைதி போன்றும் உள்ளனர்.

தேசிய விருது
தேசிய விருது பெற்ற தனுஷின் அசுரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், இதுநாள் வரை நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில்
விடுதலை என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தை ஆர்எஸ் இஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார்.

கான்ஸ்டபில் சூரி
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அதில்,வாத்தியாராக விஜய்சேதுதி.. கதாநாயகனாக சூரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூரி கான்ஸ்டபில் கெட்டப்பிலும், விஜய்சேதுபதி கைதி கெட்டப்பிலும் உள்ளனர்.
Recommended Video

சூரி நெகிழ்ச்சி
இந்நிலையில் நடிகர் சூரிதனது ட்விட்டர் பக்கத்தில், என் வாழ்வில் இந்த முக்கிய தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் அண்ணனுக்கும், இசைஞானி ஐயா அவர்களுக்கும், எல்ரெட் குமார் சாருக்கும் மனமார்ந்த நன்றிகள். புதிய பரிமாணத்தில் மாமா விஜய்சேதுபதியுடன் இணைவதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











