ஊசி குத்துன இடத்தில் லேசா வலி இருந்துச்சு… இப்ப நார்மலாகிட்டேன்… நடிகர் சூரி ட்வீட் !

சென்னை : நடிகர் சூரி தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் ஊசி குத்தின இடத்தில் லேசான வலி மட்டுமே இருந்ததாக கூறியுள்ளார்.

Recommended Video

Covaxin vs Covishield vs Sputnik வித்தியாசம் என்ன ? Best Corona vaccine எது?

இவர் கடந்த 20ந் தேதி தனது மனைவியுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

மேலும், தடுப்பூசி அவசியம் போட்டுக்கொள்ளுங்கள் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

468 பேர் பலி

468 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும், தமிழகத்தின் நேற்றைய பாதிப்பு 34,285 இருந்தது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 4,041 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் 468 பேர் உயிரிழந்துள்ளனர்.

தடுப்பூசி அவசியம்

தடுப்பூசி அவசியம்

கொரோனாவிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசியின் அவசியம் குறித்து தமிழக அரசு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளது. மேலும் திரைப்பிரபலங்களும் தடுப்பூசி போட்டுகொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்டார்

தடுப்பூசி போட்டுக்கொண்டார்

அதே போல நடிகர் சூரி கடந்த 20ந் தேதி தனது மனைவியுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, நானும் என் மனைவியும் பக்கத்தில் இருந்த மாநகராட்சி மருத்துவமனையில தடுப்பூசி போட்டுக்கிட்டோம் என்று பதிவிட்டு இருந்தார்.

6 நாளாச்சு

6 நாளாச்சு

இந்நிலையில்,தற்போது நடிகர் சூரி, நானும் என் மனைவியும் கொரோனா தடுப்பூசி போட்டு 6 நாளாச்சு, எனக்கு மட்டும் இரண்டு நாள் உடல் சோர்வும், ஊசி குத்தின இடத்தில் வலியும் இருந்துச்சு, இப்ப நானும் நார்மலாகிட்டேன். எல்லாரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கோங்க. உங்களுக்காக, உங்கள் குடும்பத்துக்காக,நாட்டுக்காக எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X