தைரியம்தான்! அஜித், சூர்யாவுடன் நேரடியாக மோதும் சூரி.. தீபாவளிக்கு விடுதலை -2 ரிலீஸ்?

By Mohan Raj

சென்னை: எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையமாகக் கொண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படம் விடுதலை பாகம் 1. சூரியுடன் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், மூணார் ரமேஷ், பாவல், பாலஜி சக்திவேல் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதுமே, பெரும்பாலான சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்த கேள்வி, " நகைச்சுவை நடிகர் சூரியை வைத்துக் கொண்டு வெற்றி மாறன் என்னமாதிரியான படத்தினைக் கொடுக்கப்போகின்றார்?" " வெற்றி மாறன் போன்ற இயக்குநரிடம் சூரி சமாளிப்பாரா?" என்ற கேள்விகள்தான்.

ஆனால் படம் வெளியானபோது அனைவரது வாயும் அடைத்துப் போகும் அளவிற்கு விடுதலை பாகம் 1 அட்டகாசமாக இருந்தது. இது மட்டும் இல்லாமல், விமர்சகர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை அனைவரும் சூரியின் நடிப்பை பாராட்டித் தள்ளினர். இளையராஜாவின் இசையில் பாடல்களும் ஹிட் அடித்ததால் படம் வசூலிலும் கெத்து காட்டியது. விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகும் வரை அந்த படம் வெற்றி மாறனின் விடுதலை என வாய்மொழியாக பேசப்பட்டு வந்த நிலையில், தனது நடிப்பால் சூரியின் விடுதலை என பேசவைத்துவிட்டார் கதாநாயகன் சூரி.

Actor Soori Viduthalai Part 2 Ajithkumar Vidamuyarchi Suriya Kanguva Vetrimaran 2

விடுதலை பாகம் 2 ரிலீஸ்: இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. சூரி, வெற்றி மாறன் எந்த பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் ரசிகர்கள் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான கேள்வியை கேட்டுக்கொண்டே இருந்தனர். விடுதலை பாகம் 2 படத்தை எப்போதே தயார் செய்த வெற்றி மாறன் படத்தை வெளிநாடுகளில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெறச் செய்தார். இப்படியான நிலையில் விடுதலை பாகம் 2 ரிலீஸ் எப்போது என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றது.

Actor Soori Viduthalai Part 2 Ajithkumar Vidamuyarchi Suriya Kanguva Vetrimaran 2

அஜித், சூர்யாவுடன் மோதும் சூரி: அதில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் எதிர்வரும் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த வருட தீபாவளிக்கு அஜித் குமாரின் விடாமுயற்சி படமும் சூர்யாவின் கங்குவா படமும் வெளியாகவுள்ளதால், தற்போது சூரியின் விடுதலை பாகம் 2-உம் வெளியாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு படங்கள் ஹீரோவாக நடித்து வெளிவந்து நிலையில் சூரி நேரடியாக பெரிய ஹீரோக்களுடன் மோதவுள்ளார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Actor Soori Viduthalai Part 2 Ajithkumar Vidamuyarchi Suriya Kanguva Vetrimaran 2

எது கொடுத்த தைரியம்?: சூரி நடிப்பில் கடந்த வாரத்தில் கருடன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது. இது மட்டும் இல்லாமல், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் வசூலும் ரூபாய் 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

Actor Soori Viduthalai Part 2 Ajithkumar Vidamuyarchi Suriya Kanguva Vetrimaran 2

விடுதலை படத்தின் முதல் பாகத்தின் வெற்றியும் கருடன் படத்தின் வெற்றியும் விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்களுக்கு உள்ள எதிர்பார்ப்பு என இவை அனைத்தும் கொடுத்த தெம்புதான் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை தீபாவளிக்கி ரிலீஸ் செய்ய சூரிக்கும் படக்குழுவுக்கும் கொடுத்திருக்கும் என்ற பேச்சுகளும் அடி படுகின்றது. பார்க்கலாம் தீபாவளி ரேஸில் முந்தப்போவது யார் பின்தங்கப்போவது யார் என்பதை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X