Soori: நயன்தாரா -தனுஷ் விவகாரம்.. முகம் மாறிய சூரி.. சொன்னது என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் சூரி அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக தன்னை இணைத்து வருகிறார். வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இவர் செய்த பரோட்டா காமெடியால் பரோட்டா சூரி என்றும் இவர் அழைக்கப்படுகிறார். தொடர்ந்து சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கலாட்டா செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இவருக்குள் இருக்கும் ஹீரோ இமேஜை கண்டறிந்த இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்தில் இவரை கான்ஸ்டபள் கேரக்டரில் நடிக்க வைத்திருந்தார். இந்தப் படம் மிகச்சிறப்பான வெற்றியை கொடுத்த நிலையில், தொடர்ந்து நாயகனாகவே நடித்து வருகிறார் சூரி. இனிமேல் இப்படித்தான் என்று அவர் முடிவெடுத்துள்ளார்.

soori viduthalai 2 movie tiruchendur temple


நடிகர் சூரி: நடிகர் சூரி அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். விடுதலை, கருடன், கொட்டுக்காளி என இவரது நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப்படங்கள் வெளியான நிலையில், அடுத்ததாக விடுதலை 2 படம் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க அடுத்தமாதம் 20ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திலும் கான்ஸ்டபளாகவே நடித்துள்ளார் சூரி. ஆனால் முதல் பாகத்தை காட்டிலும் இந்தப் படத்தில் வாத்தியாராக நடித்த விஜய் சேதுபதிக்கு காட்சிகள் அதிகமாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையொட்டி நேற்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.

திருச்செந்தூரில் சாமி தரிசனம்: இளையராஜா இசையமைத்து, எழுதி மற்றும் பாடியுள்ள இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் திருச்செந்தூர் முருகனை நேரில் சந்தித்து சாமி தரிசனம் செய்த நடிகர் சூரி, அடுத்தடுத்து தன்னுடைய ரசிகர்களை சந்தித்து செல்ஃபிக்களை எடுத்துக் கொண்டர். அவரை உற்சாகமாக ரசிகர்கள் எதிர்கொண்டனர். அதில் ஒரு சிறுவனுக்கு படங்களை மட்டுமில்லாமல் பாடங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சூரி கூறியதை பார்க்க முடிந்தது. இதனிடையே விடுதலை 2 படத்தின் முதல் பாடல் குறித்து நடிகர் சூரி உற்சாகம் தெரிவித்துள்ளார்.

இளையராஜா குறித்து உற்சாகம்: 83 வயதிலும் அதிகாலை 4 மணிக்கு கண்விழித்து உற்சாகமாக பாடல்களின் கோர்ப்பில் ஈடுபடும் இளையராஜாவிற்கு நீண்ட ஆயுளை கடவுள் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். கடந்த ஆண்டில் திருச்செந்தூர் முருகனை சந்தித்து சாமி தரிசனம் செய்ததை போலவே இந்த ஆண்டிலும் தரிசனம் செய்துள்ளதாகவும் நடிகர் சூரி தெரிவித்துள்ளார். இதனிடையே அடுத்தடுத்து ஹீரோவாக நடித்துவருவதாகவும் அடுத்த மாதம் 20ம் தேதி விடுதலை 2 படம் வெளியாகவுள்ளதாகவும் சூரி கூறியுள்ளார். முதல் பாகத்தை போலவே இந்தப் படமும் ஏராளமான ரசிகர்களை கவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


நயன்தாரா -தனுஷ் விவகாரம் குறித்து சூரி: இதனிடையே அடுத்தடுத்து கங்குவா படத்தின் வரவேற்பு, நயன்தாரா -தனுஷ் விவகாரம் குறித்தும் சூரியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதில் நயன்தாரா -தனுஷ் விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று சூரி கூறினார். இந்தக் கேள்வியால் அவரது முகம் மாறியதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து இந்த விஷயம் குறித்து தான் கவனிக்கவில்லை என்றும் அப்படியே இருந்தாலும் அது அவர்களுக்குள்ளான விஷயம் என்றும் சூரி பதிலளிக்காமல் நழுவினார். அடுத்தடுத்து தான் ஹீரோவாக கமிட்டாகியுள்ள படங்கள் குறித்தும் அவர் உற்சாகத்துடன் பகிர்ந்துக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X