twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூரியின் செல்ல மகளுக்கு பிறந்தநாள்.. வெண்ணிலா கபடி குழு டு வெண்ணிலா சூரியின் சூப்பரான வாழ்க்கை!

    |

    சென்னை: நகைச்சுவை நடிகர் சூரியின் செல்ல மகள் வெண்ணிலாவுக்கு இன்று பிறந்தநாள்.

    தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு நடிகர் சூரி தனது மகளை வாழ்த்தியுள்ளார்.

    சூரியின் ரசிகர்களும் அந்த க்யூட் செல்லத்துக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    டிக் டாக்கில் டிரெண்டாகும் சில்க் ஸ்மிதா.. வைரலாகும் வீடியோக்கள்.. யார் இந்த வெர்ஷன் 2.0?டிக் டாக்கில் டிரெண்டாகும் சில்க் ஸ்மிதா.. வைரலாகும் வீடியோக்கள்.. யார் இந்த வெர்ஷன் 2.0?

    வெண்ணிலா கபடி குழு

    வெண்ணிலா கபடி குழு

    மதுரையில் இருந்து சினிமா ஆசையுடன் சென்னைக்கு வந்து இறங்கிய ஆட்களில் சூரியும் ஒருவர். பல ஸ்டூடியோக்களில் ஏறி இறங்கிய அவருக்கு கடைசியாக மறுமலர்ச்சி படத்தில் ஆடியன்ஸ் ஆக கைதட்டும் ரோல் தான் கிடைத்தது. ஆனால், தனது விடா முயற்சியை கைவிடாமல் இருந்த சூரிக்கு வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி பேரும், புகழும் பெற்றுத் தந்தது.

    செம காம்போ

    செம காம்போ

    களவாணி, நான் மகான் அல்ல, தூங்கா நகரம், குள்ளநரிக் கூட்டம், வாகை சூடவா, வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் காமெடி செய்து வந்தாலும், 2012ம் ஆண்டு சிவகார்த்திகேயனின் மனங்கொத்தி பறவை படத்தில் நடித்ததன் பின்னர் தான் சூரி முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என சிக்ஸர் அடித்தார்.

    பெரிய குடும்பம்

    பெரிய குடும்பம்

    மதுரைக்காரனான சூரியின் குடும்பம் மிகப் பெரிய குடும்பம் சன் டிவி, விஜய் டிவி என தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் கேமரா தூக்கிக் கொண்டு சூரியின் வீட்டுக்கு சென்றால், செம என்டர்டெயின்மென்ட் புரோகிராம் ரெடியாகி விடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. கள்ளங்கபடம் இல்லாமல் சிரிக்கும் குணமுடையவர் சூரி.

    லாக்டவுன் சேட்டை

    லாக்டவுன் சேட்டை

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வந்த நிலையில், லாக்டவுனால் வீட்டிலேயே முடங்கி உள்ளார் சூரி. சூரிக்கு சர்வான் எனும் மகனும், வெண்ணிலா எனும் மகளும் உள்ளனர். லாக்டவுன் ஆரம்பத்தில் தொடர்ந்து 10 நாட்கள் குழந்தைகளுடன் சேட்டை செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார் சூரி. பின்னர் அவருக்கே அது போரடித்துவிட நிறுத்திக் கொண்டார்.

    வெண்ணிலா பிறந்தநாள்

    வெண்ணிலா பிறந்தநாள்

    இந்நிலையில், தற்போது தனது மகள் வெண்ணிலாவின் பிறந்தநாள் என டிவிட்டரில் மகனுடனும், மகளுடனும் ஜாலியாக விளையாடும் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். சூரியின் ரசிகர்களும், தமிழ் சினிமா ரசிகர்களும் சூரியின் செல்ல மகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஹேப்பி பர்த்டே வெண்ணிலா பேபி!

    English summary
    Actor Soori’s daughter Vennila’s Birthday today. Soori tweet some images with his children and convey his birthday wishes to Vennila.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X