உலக சினிமாவை தமிழ் மொழியில் தரும் படைப்பாளி.. வெற்றி மாறனுக்கு ஹாப்பி பர்த்டே சொன்ன சூரி!

சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதையொட்டி அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்களில் இவருக்கும் சிறப்பான இடம் உண்டு.

இயக்குநர் வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பான பல படங்களை கொடுத்துள்ளார். பொல்லாதவன் என்ற படத்தை கமர்ஷியலாக கொடுத்த இவர்தான் வட சென்னை உள்ளிட்ட அழுத்தமான கதைக்களங்களை கொண்ட படங்களையும் கொடுத்துள்ளார். ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைக்கும் படைப்புகளுக்கு சொந்தக்காரரான வெற்றிமாறன் இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

 சூரியின் விடுதலை படம்

சூரியின் விடுதலை படம்

இவரது இயக்கத்தில் தனுஷ் உள்ளிட்ட வெற்றி நாயகர்கள் நடித்து படங்கள் வெளியான நிலையில், என்ன நினைத்தாரோ என்னவோ திடீரென சூரியை நாயகனாக்கி விடுதலை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

உதயநிதி கைப்பற்றிய வெளியீட்டு உரிமை

உதயநிதி கைப்பற்றிய வெளியீட்டு உரிமை

படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ரசிகர்களை திரையரங்குகளில் இந்தப் படம் சந்திக்க உள்ளது. படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.

வெற்றிமாறன் பிறந்தநாள்

வெற்றிமாறன் பிறந்தநாள்

இந்நிலையில் இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் வெற்றி மாறனுக்கு பிரபல நடிகர்கள் பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது அவரது விடுதலை படத்தில் நடித்து முடித்துள்ள சூரியும் வெற்றிமாறனுக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மாபெரும் படைப்பாளி

மாபெரும் படைப்பாளி

மக்கள் வாழ்வியல் பேசும் உலக சினிமாவை தமிழ் மொழியில் தரும் மாபெரும் படைப்பாளி என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெற்றிமாறனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அறம் போற்றும் விவசாயி, கடுமையான உழைப்பாளி அண்ணன் வெற்றி மாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

 இரண்டு பாகங்கள்

இரண்டு பாகங்கள்

சூரி, விஜய் சேதுபதி, கிஷோர், பவானி ஸ்ரீ உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது விடுதலை படம். இந்தப் படம் தற்போது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தையும் வெற்றிமாறன் இயக்கவுள்ள நிலையில், இந்த இரு படங்களில் எந்தப் படத்தை அவர் முதலில் இயக்குவார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X