twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    40 வருட கடின உழைப்பிற்கும்… பொறுமைக்கும் கிடைத்த பலன்…சூரி வாழ்த்து !

    |

    சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளதற்காக திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலினுக்கு நகைச்சுவை நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    கடனில் சிக்கித் தவிக்கும் சிவகார்த்திகேயன்.. அவர்தான் காரணமாம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! கடனில் சிக்கித் தவிக்கும் சிவகார்த்திகேயன்.. அவர்தான் காரணமாம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

    தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி சுமார் 155க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    பல தொகுதிகளில் முன்னிலை

    பல தொகுதிகளில் முன்னிலை

    மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்அதிக இடங்களில்முன்னிலைபெற்றுள்ளன. பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்துள்ள கட்சிகளுக்கும் திமுகவுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் அதிகம் உள்ளதால் தங்களது வெற்றி உறுதியாகிவிட்டதாக கூறி தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

    திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

    திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

    தமிழக தேர்தல் முடிவுகள்அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.

    ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்து

    ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்து

    நகைச்சுவை நடிகர் சூரி, ட்விட்டரில், தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில்,40 வருட கடின உழைப்பிற்கும், பொறுமைக்கும் பலனாக 6வது முறை திமுக சார்பில் தமிழக முதல்வராக பதவி ஏற்கும் கழத் தலைவர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

    தொலைபேசியில் வாழ்த்து

    தொலைபேசியில் வாழ்த்து

    இதேபோல், நடிகர் ரஜினிகாந்த் ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தொண்டர்கள் தங்களது மகிழ்ச்சியை இணையத்தின் வாயிலாக தெறிவிக்கவிட்டு வருகின்றனர்.

    English summary
    Actor Soori wishes to Mk Stalin
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X