ஒற்றைக் காலில் நின்றும்.. கைகளை மட்டும் ஊன்றியும்.. நடிகர் சூரியின் அசத்தல் யோகா!

சென்னை: யோகா தினத்தை முன்னிட்டு நடிகர் சூரி யோகா செய்யும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actor Soori Yoga pose goes viral

இன்று ஏழாவது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐநா அவையில் உரையாற்றியபோது விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்தத் தினம் பின்பற்றப்பட்டு வருகிறது.

யோகா தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் யோகா செய்து தங்களின் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் சூரி யோகா செய்துள்ளார். தான் யோகா செய்துள்ள போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி கைகளை மட்டும் தரையில் ஊன்றி உடல் முழுவதையும் மேலே தூக்கி யோகா செய்துள்ளார். இதேபோல் ஒன்றைக்காலில் நின்றும் நடிகர் சூரி யோகா செய்துள்ளார்.

மேலும் இந்த சூழலில், உடல் நலம் மன நலம் இரண்டையும் பாதுகாப்பது பேரவசியம்... அந்த பாதுகாப்பு தரும் அற்புத கலை யோகா. உலக யோகா தின நல்வாழ்த்துகள் என்றும் பதிவிட்டுள்ளார் சூரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X