Garudan Review: சூரியின் கருடன் படம் எப்படி இருக்கும்.. ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம்!
சென்னை: காமெடியில் கலக்கி வந்த நடிகர் சூரி, இன்று கதையின் நாயகனாக மாறியுள்ளார். விடுதலை முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ள சூரியின் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் தான் கருடன். இந்த படத்தில், சசிக்குமார் இருந்தாலும் சூரி அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சூரியுடன் இணைந்து சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, வடிவுக்கரசி, ரோஷினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்க்கலாம்.

இந்த படத்தில் 3 முக்கிய கதாபாத்திரம் இருக்கு அதில் சசிக்குமார் லாரி ட்ரான்ஸ்போர்ட் வைத்து இருக்கிறார். அவரின் உயிர் நண்பர் உன்னிமுகந்த் இவர் வாழ்ந்து கெட்ட ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர். இந்த குடும்பத்தில் சிறு வயது முதலே வளர்ந்து வருபவர் சூரி, சோறு போட்டு வளர்த்த காரணத்திற்கான உன்னி முகந்திற்கு விஸ்வாசியாக இருக்கிறார், அவருக்காக உயிரை கொடுக்கவும் தயாராக இருக்கிறார் சூரி. இந்த நேரத்தில் தான் உன்னி முகந்திற்கு ஒரு சிறிய பணப்பிரச்சனை வருகிறது. அதை சமாளிப்பதற்காக ஒரு தவறை செய்ய அது வெட்டு, குத்து,கொலையில் போய் முடிகிறது. இந்த நேரத்தில் சூரி உண்மைக்கு பக்கமாக இருக்கிறாரா... இல்லை விஸ்வாசத்திற்கு பக்கமாக இருக்கிறாரா என்பது தான் கருடன் திரைப்படத்தின் கதை.
ரசிக்கும் படி இருந்தது: இந்த மாதியான கதையை நாம் நிறைய பார்த்துவிட்டதால், அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. படத்தின் கிளைமாக்ஸ் இதுவாகத்தான் இருக்கும் என்று யூகிக்கும் அளவிற்கு இருந்தது. படத்தில் நிறைய ட்விஸ்டுகள் இருந்தது ஆனால், அதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருந்தால், படத்தோடு இணைந்து நாம் பார்க்க நல்லவே இருந்து இருக்கும். நாலு நண்பர்கள் அவர்களுக்கு ஒரு காதலி என்று படத்தை கொண்டு செல்லாமல் ஒரே நேர் கோட்டில் படத்தை கொண்டு சென்றது நன்றாக இருந்தது.
படத்தின் பிளஸ்: இந்த படத்தில் மூன்று ஹீரோ என்பதால், படத்தில் யாரை பாலோ செய்ய வேண்டும் என்பதை, மைண்டில் செட் பண்ண வேண்டியது ஒர இயக்குநரின் கடமை. இதை இடைவெளி காட்சியில் சொல்லாமல் சொல்லி இருந்தார் இயக்குநர் அது ரசிக்கும்படி இருந்தது. இந்த காட்சி காந்தாரா படத்தின் பீல் கொடுத்தாலும் அந்த காட்சி ரசிக்கும்படி இருந்தது. அதே போல ப்ரீ கிளைமாக்ஸில் சூரி சில சம்பவங்களை செய்வார் அதுவும் நன்றாக இருந்தது.
நல்லா இருக்கு: மொத்தத்தில் இந்த படத்தில் சில குறைகள் இருந்தாலும், திரைக்கதையில் இன்னும் சுவாரசியத்தை கூட்டி இருந்தால், இந்த படம் ரொம்ப நல்லப்படம் என்று சொல்லி இருக்கலாம். இருந்தாலும் இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம். வழக்கமாக இது போன்ற படத்தை ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், கருடன் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம். மேலும், இந்த படத்தை பார்க்க சொல்லுவதற்கு ஒரு சுயநலமும் இருக்கு, கடந்த 6 மாசமா குப்பை படத்தையெல்லாம் வெளியிட்டு நம்மை சாகடித்த படத்திற்கு இந்த படம் ரொம்ப நல்லா இருக்கு என்று ப்ளு சட்டை மாறன் கருடன் படத்திற்கு தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











