Actor Soori: நாளை ரிலீசாகும் சூரியின் கருடன்.. வெளியானது மிரட்டலான மேக்கிங் வீடியோ!
சென்னை: நடிகர் சூரி அடுத்தடுத்து ஹீரோவாக களம் இறங்கி மாஸ் காட்டி வருகிறார். கடந்த ஆண்டில் சூரியின் நடிப்பில் வெளியாகி சிறப்பான வெற்றியை கொடுத்த விடுதலை படம் அவருக்கு தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்கும் வாய்ப்புகளை பெற்று தந்து வருகிறது. அந்த வகையில் சூரி நடிப்பில் அடுத்ததாக கருடன் படம் நாளைய தினம் தமிர் மற்றும் தெலுங்கில் ரிலீசாகவுள்ளது.
இந்த படத்தில் சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ரேவதி ஷர்மா, ரோஷினி ஹரிப்பிரியன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சூழலில் இன்றைய தினம் படத்தின் மேக்கிங் வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கருடன் படம்: நடிகர் சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ரேவதி ஷர்மா, ரோஷினி ஹரிப்பிரியன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கருடன். துரை செந்தில் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் நடிகர் சூரி கூறிய கதையை இயக்குனர் துரை செந்தில்குமார் மேம்படுத்தி கருடன் படத்தை இயக்கியுள்ளதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் கருடன் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
விடுதலை படம்: கடந்த ஆண்டில் சூரி நடிப்பில் விடுதலை படம் வெளியாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. படத்தில் குமரேசன் என்ற கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்திருந்தார் சூரி. இந்த படத்தில் அவருக்கு பவானி ஸ்ரீ ஜோடியாக நடித்திருந்தார். அந்த வகையில் நாளைய தினம் சூரி ஹீரோவாக நடித்துள்ள கருடன் படம் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் ட்ரெயிலர் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்று படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் சூரி உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கருடன் மேக்கிங் வீடியோ: கருடன் படம் நாளைய தினம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் மிகப் பெரிய மாஸ் வெற்றியை பெற்று விடுதலை படத்தை போலவே சூரியின் கேரியரில் மிகச் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் படத்தின் பூஜையில் நடிகர் கார்த்தி பங்கேற்றது முதல் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சூரி, சசிகுமார் உள்ளிட்ட நடிகர் நடிகைகளின் ஒத்துழைப்பும் துரை செந்தில் குமாரின் சிறப்பான ஒருங்கிணைப்பும் இந்த மேக்கிங் வீடியோவில் காணப்படுகிறது.
ரசிகர்களை கவர்ந்த யுவன் இசை: இந்த வீடியோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து நாளைய தினம் வெளியாகவுயுள்ள கருடன் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள சூழலில், படத்தின் பாடல்கள் மட்டுமில்லாமல் பிஜிஎம்மும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக படத்தின் இடைவேளைக்கு முந்தைய காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











