Actor Soori: சூரியின் கருடன்..புதிய வீடியோவுடன் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
சென்னை: வெண்ணிலா கபடி குழு படம் மூலம் காமெடியனாக தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் சூரி. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து இவர் பல படங்களில் காமெடி கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார் சூரி.
விடுதலை படத்தை தொடர்ந்து சூரிக்கு நாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. விடுதலை 2 படத்தில் சூரி மீண்டும் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் சூரி சசிக்குமாருடன் இணைந்து நாயகனாக நடித்துள்ள கருடன் படத்தின் ரிலீஸ் தேதியை இன்றைய தினம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதையொட்டி வெளியாகியுள்ள வீடியோவும் மிரட்டலாக அமைந்துள்ளது.

நடிகர் சூரி: நடிகர் சூரி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தொடர்ந்து காமெடியனாக வலம் வந்தவர். தன்னுடைய பாடி லாங்குவேஜ் மற்றும் டைமிங் காமெடி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த சூரிக்கு அந்த படத்தின் பரோட்டா காமெடி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்தது. ஒரு கட்டத்தில் பரோட்டா சூரி என்றே அவர் அழைக்கப்பட்டார். தொடர்ந்து சீமதுரை திரைப்படத்தில் தன்னுடைய சிக்ஸ் பேக்ஸ் உடம்பை காட்டி மிரட்டினார். இந்நிலையில் கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்து வெளியான விடுதலை படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.
விடுதலை படம்: விடுதலை படத்தில் கான்ஸ்டபிளாக நடித்து தன்னுடைய நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் சூரி. இந்தப் படத்தில் சூரி மற்றும் பவானிஸ்ரீ காம்பினேஷன் சிறப்பாக அமைந்திருந்தது. இந்நிலையில் இந்த படம் சூரிக்கு அடுத்தடுத்து நாயகனாகவே நடிக்கும் வாய்ப்புகளை பெற்றுத் தந்து வருகிறது. அடுத்ததாக விடுதலை 2 படத்திலும் சூரி ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சூரி நடித்து வருகிறார். இந்நிலையில் சசிக்குமாருடன் இணைந்து சூரி நடித்துள்ள கருடன் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கருடன் ரிலீஸ் தேதி: முன்னதாக இந்த படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வரும் மே மாதம் 31ம் தேதி என்று படக்குழு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்தில் உன்னி முகுந்தன் வில்லனாக நடித்துள்ளார் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள சூழலில் படப்பிடிப்பு முன்னதாக நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வந்தன. படத்தின் கதையை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் எழுத, துரை செந்தில்குமார் படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிவதா, ரோஷிணி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்வி உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட நடிகர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
ரிலீஸ் தேதியுடன் வீடியோ: இந்நிலையில் ரிலீஸ் குறித்து அறிவிப்புடன் வெளியாகியுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில் ஆக்ரோஷத்துடன் சூரி கத்தும் காட்சி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விரைவில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கியுள்ள துரை செந்தில்குமார், இந்தப் படத்தில் எந்தமாதிரியான கதைக்களத்தை கையாண்டிருப்பார் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











