Garudan movie: கொம்பு வச்ச கொடுவக்காளை.. அதிரடியாக வெளியானது கருடன் பட வீடியோ பாடல்!

சென்னை: நடிகர் சூரி ஹீரோவாக நடித்து இரண்டாவது படமாக வெளியாகி உள்ளது கருடன். இவர் ஹீரோவாக நடித்து கடந்த ஆண்டில் வெளியான விடுதலை படம் வெற்றிமாறன் இயக்கத்தில் மிகச் சிறப்பான வகையில் சூரிக்கு கை கொடுத்தது. இந்நிலையில் அடுத்த படத்திலும் ஹீரோவாக அவர் ஜொலிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு தற்போது கருடன் படம் விடையாகியுள்ளது.

கருடன் படம் சூரியின் கேரியரில் மேலும் சிறப்பை சேர்த்துள்ளது. படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கொம்பு வச்ச வீடியோ பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கிராமத்து மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஒவ்வொரு காட்சியையும் துரை செந்தில்குமார் மிகச் சிறப்பாக அமைத்துள்ளார்.

Soori Garudan movie Durai senthilkumar Tamil cinema

கருடன் படம்: நடிகர் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியாகி உள்ளது கருடன் படம். கடந்த ஆண்டில் சூரி ஹீரோவாக நடித்து வெளியான விடுதலை படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. படத்தில் குமரேசன் என்ற கான்ஸ்டபிள் கேரக்டரில் அவர் அதகளம் செய்திருந்தார். கருடன் படமும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியானது. ரசிகர்களை இந்தப் படம் ஏமாற்றவில்லை. துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் சூரியை மற்றொரு பரிணாமத்தில் ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வீடியோ பாடல் ரிலீஸ்: அவரது ஆக்ரோஷமான நடிப்பு பல இடங்களில் ரசிகர்களை சிறப்பாக உணர வைத்துள்ளது. படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தனும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் படத்தில் சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ரோஷினி ஹரிப்பிரியன் உள்ளிட்டவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களை மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளனர். இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் கொம்பு வச்ச கொடுவக்காளை என்ற வீடியோ பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Soori Garudan movie Durai senthilkumar Tamil cinema

யுவன் சங்கர் ராஜா இசை: யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த பாடல் கிராமத்து மக்களின் வாழ்க்கை முறைகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சசிகுமார், சூரி, உன்னி முகுந்தன் உள்ளிட்டவர்கள் கிரிக்கெட் ஆடுவதும் அவர்களின் அன்னியோன்யமும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை இல்லாத ஏக்கத்தை ரோஷினி சிறப்பாக வெளிப்படுத்துகிறார். அவரது அந்த ஏக்கத்தை புரிந்து கொண்டு கண்களாலையே ஜாடை காண்பித்து தன்னுடைய மனைவியை செயல்பட வைக்கும் சசிகுமாரும் மிகச் சிறப்பாக காணப்படுகிறார். இந்த பாடல் இந்த படத்தின் ஒட்டுமொத்த கதையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அசத்தும் நட்பு: இந்த ஒரே பாடலில், சூரி, உன்னி முகுந்தன், சசிக்குமாரின் நட்பு, வடிவுக்கரசியின் ஆளுமை, கிராமத்து பசுமை உள்ளிட்டவை மிகசிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையும் வெற்றிமாறனின் கதையும் மிகச் சிறப்பாக பொருந்தி உள்ளது. படம் தொடர்ந்து திரையரங்குகளில் மாஸ் காட்டி வரும் சூழலில் சூரி ஹீரோவாக நடித்துவரும் அடுத்தடுத்த படங்கள் அதிகமான எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X