கருடன் மற்றுமொரு விடுதலை.. அதிரடி காட்டிய சூரி..கருடன் டிரைலர் வெளியானது!

சென்னை: சூரி கதாநாயகனாக நடித்துள்ள கருடன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படம் இந்த மாதம் 31ந் தேதி வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமாக யோசித்து கதைகளை இயக்க வேண்டும் என்று ஆசைப்படும் இயக்குநர்களில் முக்கியமானவர் தான் இயக்குநர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில், கடைசியாக சூரி நடிப்பில் விடுதலை திரைப்படம் வெளியானது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது. இதில், சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்க விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Actor Soori s garudan trailer trending on social media

சூரியின் கருடன்: இதுவரை நகைக்சுவை நடிகராக நடித்து வந்த சூரி, விடுதலை படத்தில் கதாநாயகனாக குமரேசன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி சூரிக்கு பாராட்டுகள் குவிந்தன. விடுதலைப்படத்தை தொடர்ந்து சூரி ஹீரோவாக கருடன் படத்தில் நடித்துள்ளார். மேலும், சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரகனி, மைம் கோபி, ஆர்வி உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மிரட்டலான டிரைலர்: இப்படத்தின் டிரைலரை சற்று முன் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், நம்ம ஆசைப்பட்ட விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ இயற்கையோ அதை சரியான வழியில முடிச்சி வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திக்கிட்டு இருக்கு என்கிற பின்னணி குரலுடன் டிரைலர் தொடங்குகிறது. அதிரடி ஆக்ஷன் சண்டை காட்சிகள் அனைவரையும் அலறவிட்டுள்ளது. இதில் சொக்கன் என்கிற கதாபாத்திரத்தில் கருணா நண்பனாக நடித்துள்ளார். விடுதலை படத்தைப் போல இந்த படத்திலும், ஆக்ஷன் காட்சியிலும், எமோஷனிலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். தற்போது வெளியான இந்த டிரைலர் யூடியூப்பில் டிரெண்டாகி வருகிறது.

வெற்றிமாறன் கொடுத்த வாய்ப்பு: முன்னதாக இப்படத்தின் இசைவெளியிட்டு விழாவில் பேசிய சூரி, காமெடி கதாபாத்திரங்களை நடிக்கும் பொழுது அதற்கான காட்சிகளை மட்டும் நடித்துவிட்டு சென்று விடுவோம், ஆனால், கதாநாயகனாக நடிக்கின்ற போது மிகப்பெரிய பொறுப்புணர்ச்சி இருப்பதாக உணர்கிறேன் என்றார். கதாநாயகனாக வெற்றிமாறன் அளித்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு மெனக்கெட வேண்டிய உள்ளது. மேலும் தான் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமை அடைகிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X