Actor Soori: சூரியின் மிரட்டலான நடிப்பில் கொட்டுக்காளி படம்.. ரிலீஸ் எப்ப தெரியுமா?

சென்னை: காமெடியனாக சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் சூரி, தற்போது நாயகனாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான விடுதலை படம் மிகப்பெரிய அளவில் நாயகனாக சூரியை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்துள்ளது.

விடுதலை படத்தை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக சூரி நடிப்பில் வெளியான கருடன் படமும் நாயகனாக அவரது நடிப்பில் வெளியாகி மிரட்டலாக அமைந்தது. சூப்பர் ஹிட் படமாக மாறியது. இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார் சூரி. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

Soori Sivakarthikeyan Kottukkaali movie

நடிகர்சூரி: நடிகர் சூரி காமெடியனாக தன்னுடைய கேரியரை சினிமாவில் துவங்கிய நிலையில் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியனாக பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் மூலம் அவர் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்தியுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான கருடன் படமும் சூரிக்கு ஹீரோவாக மிகச் சிறப்பாக கை கொடுத்துள்ளது. இதையடுத்து தொடர்ந்து ஹீரோவாகவே சூரி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கொட்டுக்காளி படம்: இந்நிலையில் ஹீரோவாக அவரது அடுத்த படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கூழாங்கல் பட இயக்குனர் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படத்தில் சூரி அன்னா பெண் உள்ளிட்டவர்கள் முன்னணி கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய எஸ்கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில் கருடன் பட ப்ரோமோஷன்களில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் கொட்டுக்காளி படம் குறித்தும் தன்னுடைய பாராட்டுகளை பகிர்ந்திருந்தார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பு: இந்தப்படம் சூரியை ஹீரோவாக அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று கூறியிருந்தார். கொட்டுக்காளி படம் தொடர்ந்து சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிலும் கொட்டுக்காளி படம் திரையிட தேர்வாகி இருந்தது. ஒரு தமிழ் படம் இந்த கௌரவத்தை பெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்பட்டுள்ளது. கூழாங்கல் திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுள்ள பிஎஸ் வினோத் ராஜ் தற்போது கொட்டுக்காளி படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாத ரிலீஸ்?: இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர்களாக சிவகார்த்திகேயன் -சூரி கூட்டணியில் பல படங்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது சூரியின் கொட்டுக்காளி படத்தை தயாரித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் தன்னுடைய கேரக்டரை வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக கரகரப்பான குரல் வேண்டும் என்று இயக்குனர் கேட்டதாகவும் அதற்காக மருத்துவர் ஒருவரை அணுகி அவர் சொன்னது போல சில நாட்டு மருந்துகளை எடுத்துக்கொண்டு கொட்டுக்காளி படத்தில் கரகரப்பான குரலில் டப்பிங் பேசியதாகவும் சூரி தனது பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இதனால் இந்த படம் தன்னை மற்றொரு கோணத்தில் வித்தியாசப்படுத்தி காட்டும் வாய்ப்பாக அமைந்தது என்றும் சூரி கூறியிருந்தார். இந்நிலையில் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X