சூரி நாயகனாகும் அடுத்தப்படம்.. அப்டேட்டுடன் ரசிகர்களை குஷியாக்கிய டீம்!

சென்னை: நடிகர் சூரி வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்து பரோட்டா சூரியாகவே கொண்டாடப்பட்டவர். சிவகார்த்திகேயனுடன் இவரும் சிறப்பாக வளர்ந்தவர். ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் இவர்களின் காம்பினேஷன் கொண்டாடப்பட்டு சிறப்பான வெற்றியையும் கொடுத்தன.

இதையடுத்து ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து காமெடியனாக பயணித்த சூரி, ஒரு கட்டத்தில் வெற்றிமாறனின் விடுதலை படம் மூலம் ஹீரோவாக அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார். படத்தில் இவரது கேரக்டர் மற்றும் இயல்பான நடிப்பு மிரள வைத்தது. இந்தப் படத்திற்கும் சிறப்பான கவனத்தை பெற்றுக் கொடுத்தது.

Soori Maaman movie Aiswarya lekshmi

நடிகர் சூரி: நடிகர் சூரியை காமெடியனாக பல படங்களில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடினர். வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இவரது பரோட்டா காமெடி எவர்கிரீன் ரகம். தொடர்ந்து ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கலாட்டா செய்துள்ள சூரிக்கு பெஸ்ட் காம்பினேஷனாக சிவகார்த்திகேயன் பார்க்கப்படுகிறார். இவர்களது காம்பினேஷனில் வெளியான ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்றன. காமெடியனாக சூரியின பாடி லேங்குவேஜ் மற்றும் டைமிங் காமெடி மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றன.

ஹீரோவாக கலக்கும் சூரி: பல படங்களில் தன்னுடைய உணர்ச்சிப்பூர்வமான நடிப்பையும் சூரி கொடுத்துள்ள நிலையில் ஒரு கட்டத்தில் காமெடியை விட்டுவிட்டு ஹீரோவாக தோன்றினார் சூரி. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படம் மூலம் ஹீரோவாக தன்னை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தினார். இந்தப் படத்தில் இவர் ஏற்றிருந்த குமரேசன் என்ற கான்ஸ்டபள் கேரக்டர் படத்திற்கு உயிர்ப்பை கொடுத்தது. வெற்றியையும் வசூலையும்தான். தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திலும் ஸ்கோர் செய்திருந்தார் சூரி. முன்னதாக இவர் ஹீரோவாக நடித்து கருடன், கொட்டுக்காளி படங்களும் வெளியாகி மிகச்சிறந்த பெயரை சூரிக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.

சூரியின் மாமன் படம்: இதனிடையே விடுதலை 2 படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூரி ஹீரோவாக களமிறங்கும் படத்தை இயக்கிவருகிறார் விலங்கு வெப் தொடரை இயக்கிய பிரஷாந்த் பாண்டியராஜ். இந்தப் படத்திற்கு மாமன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி சூரிக்கு ஜோடியாகியுள்ளார். மேலும் லப்பர் பந்து படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ஸ்வாசிகா படத்தில் சூரிக்கு தங்கையாக நடித்து வருகிறார். முன்னதாக இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் இன்றைய தினம் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.

கோடை கொண்டாட்ட ரிலீஸ்: குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் திருச்சியை ஒட்டிய இடங்களில் மும்முரமாக நடத்தப்பட்டு வருகிறது. லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் துரிதமாக நடந்துவரும் நிலையில் படம் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து வருகிறார். இந்த இரண்டாவது போஸ்டரில் பந்துடனும் கோபத்துடனும் சூரி காணப்பட, அவரது காலை பிடித்தபடி சிறுவன் ஒருவன் பார்ப்பதாக காணப்படுகிறான். படம் விளையாட்டையும் மையமாக கொண்டு உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X