Actor Soori:: சார் என்கூட ஒரு செல்ஃபி.. ஹீரோ மெட்டீரியல் என அடுத்தடுத்து நிரூபிக்கும் சூரி!
மதுரை: நடிகர் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கருடன் படம் சில தினங்களுக்கு முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டி வசூலிலும் சாதனை புரிந்து வருகிறது. விடுதலை படத்தை தொடர்ந்து கருடன் படத்திலும் ஹீரோவாகவே நடித்து அசத்தியுள்ளார் சூரி.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாகவே அவர் நடிக்க கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் கருடன் படத்தை மதுரையில் பிரபல திரையரங்கில் சென்று ரசிகர்களுடன் சென்று கண்டு களித்துள்ளார் சூரி. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளது. இந்த தியேட்டர் விசிட்டின் போது சூரியை ரசிகர்கள் கொண்டாடியதை பார்க்க முடிந்தது.

நடிகர் சூரி: வெண்ணிலா கபடி குழு படம் மூலம் தன்னை காமெடி கேரக்டரில் இணைத்துக் கொண்ட நடிகர் சூரி. இந்த படத்தில் பரோட்டா சாப்பிடுவதற்காக செய்த அலப்பறையை அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. இந்த படத்தின் இந்த பரோட்டா காமெடியால் பரோட்டா சூரி என்றே இவர் அழைக்கப்பட்டார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடி கலாட்டா செய்த சூரி, கடந்த ஆண்டில் வெளியான விடுதலை படம் மூலம் தன்னை ஹீரோவாக மாற்றிக் கொண்டுள்ளார். விடுதலை படத்தில் குமரேசன் என்ற கான்ஸ்டபிள் கேரக்டரில் சூரி மிகச் சிறப்பாக பொருந்தியிருந்தார்.
கருடன் படம்: சூரியின் இந்த கேரக்டர் மற்றும் இந்த படத்தின் கதைக்களம் ரசிகர்கள் மனதில் எப்போதும் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இந்த படத்தின் மூலம் தற்போது ஹீரோவாக மாறியுள்ளார் சூரி. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாகவே நடித்து வரும் சூரியின் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கருடன் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரகனி உள்ளிட்டவர்களுடன் இணைந்து சூரி அதகளம் செய்துள்ளார். இந்த படத்தில் சூரியின் கேரக்டர் மிகவும் அழுத்தமானதாக ரசிகர்களை வெகு சிறப்பாக கவரும் வகையில் அமைந்துள்ளது.
மாஸ் காட்டும் கருடன்: இந்தப் படம் கடந்த இரு வாரங்களாக திரையரங்குகளில் சிறப்பாக மற்றும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. படம் 100 கோடி ரூபாய் கலெக்ஷனை நோக்கி பயணித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை மதுரையில் பிரபல திரையரங்கில் ரசிகர்களுடன் சென்று கண்டு களித்துள்ளார் நடிகர் சூரி. இந்த தியேட்டர் விசிட்டின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ மட்டும் இல்லாமல் சூரியின் தியேட்டர் விசிட்டும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது. சூரியுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொள்ள ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் போட்டி நடந்தது.
ஹீரோ மெட்டீரியல்: கருடன் படத்தை பார்த்ததுடன் ரசிகர்களுடன் இணைந்து அதை கொண்டாடவும் செய்த சூரி, தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்ததை பார்க்க முடிந்தது. இந்த படம் சூரியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் அவர் ஹீரோவாகவே நடித்து வருகிறார். இனிமேல் இப்படித்தான் என்று சொல்லும் அளவிற்கு சூரியின் சினிமா கேரியர் தற்போது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தான் ஒரு ஹீரோ மெட்டீரியல் என்பதை தொடர்ந்து சூரி நிரூபித்து வருகிறார். அவரை ரசிகர்களும கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











