இன்னும் ரிலீஸே ஆகல அதுக்குள்ள இப்படியா.. க/பெ ரணசிங்கம் படத்தை புகழ்ந்து தள்ளும் மற்றுமொரு பிரபலம்!

சென்னை: விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் க/பெ ரணசிங்கம் படத்தை மற்றுமொரு பிரபலம் பாராட்டியிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் பெ.விருமாண்டி இயக்கியிருக்கும் படம் க/பெ ரணசிங்கம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் லீடிங் ரோலில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் ஷுட்டிங் அனைத்தும் முடிந்து படத்தின் கடைசிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தர்மதுரை படத்திற்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் இந்தப் படத்தில் கணவன் மனைவியாக நடிக்கின்றனர். மனைவியான ஐஸ்வர்யா ராஜேஷ் காணாமல் போன தனது கணவரை தேடுவதை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 முக்கிய படங்களில்..

முக்கிய படங்களில்..

இந்தப் படத்திற்கு ஜிப்ரான் ரீரெக்கார்டிங் செய்கிறார். இதனை முன்னிட்டு படத்தை பார்த்த ஜிப்ரான், தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு அபாரம் என்றும் டிவிட்டியிருந்தார்.

முக்கியமான படம்

முக்கியமான படம்

இந்நிலையில் அவரை தொடர்ந்து நடிகர் சவுந்தரராஜாவும் படத்தையும் படக்குழுவையும் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் "ரணசிங்கம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் - இசையமைப்பாளர் ஜிப்ரான்.

Recommended Video

Arjun மகளுடன் அட்டகாசம் | Sisters RapidFire | Shruthi Akshara | Aiswarya Anjana, Arjun Darja, Kamal
சொல்லவே தேவையில்லை

சொல்லவே தேவையில்லை

வாழ்த்துகள் விருமாண்டி மாமா, ரணசிங்கம் படத்தின் இயக்குநர். படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கிறேன். பெரும் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துகள். என்னுடைய அன்புக்குரிய நண்பர்கள், விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி சொல்லவே தேவையில்லை.. என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் பட்டாளம்..

நடிகர் பட்டாளம்..

நடிகர் சவுந்தரராஜா விஜய் சேதுபதியுடன் சுந்தர பாண்டியன், தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார். ரணசிங்கம் படத்தில் சமுத்திரக்கனி, 'பூ' ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X