தமன்னாவை திருமணம் செய்த நடிகர் சவுந்தரராஜா: பிரபலங்கள் வாழ்த்து
Recommended Video

சென்னை: நடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார்.
சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தெறி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் சவுந்தரராஜா. தற்போது அவர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நிச்சயம் செய்தது போன்று அவரின் திருமணம் இன்று நடைபெற்றது.

திருமணம்
சவுந்தரராஜாவுக்கும், தமன்னா என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. மே மாதம் திருமணம் என்று முடிவு செய்தனர். அதன்படி இன்று திருமணம் நடைபெற்றது.

வாழ்த்து
சவுந்தரராஜாவுக்கும், தமன்னாவுக்கும் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் காளி வெங்கட், நடிகை ரோகினி உள்ளிட்டோர் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

தமன்னா
நிச்சயதார்த்தம் நடந்தபோது தமன்னா என்ற பெயரை பார்த்ததும் நடிகை தமன்னாவோ என்று ரசிகர்கள் நினைத்தனர். அதன் பிறகு தான் அது வேறு ஒரு பெண் என்பதை தெரிந்து கொண்டனர்.

ஏன்?
திருமணமே வேண்டாம் என்று இருந்த சவுந்தரராஜா தனது தாயை போன்று அன்பு காட்டிய தமன்னாவை பார்த்ததும் மனதை மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி
திருமண வேலைகளுக்கு இடையேயும் தூக்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சவுந்தரராஜா ட்விட்டரில் கொந்தளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











