முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டேன்.. போட்டோவுடன் பகிர்ந்த பிரபல நடிகர்!
சென்னை: பிரபல நடிகரான சவுந்தரராஜா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டபோட்டோவை ஷேர் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் சவுந்தரராஜா. பெரும்பாலும் வில்லன் நடிகராக வலம் வரும் சவுந்தரராஜா குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.
வேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான சவுந்தரராஜா, சுந்தரப்பாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, அதிதி, பூஜை, தர்மதுரை, தெறி, கத்தி சண்டை, றெக்க, பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் வெளியான ஜகமே தந்திரம் படத்திலும் நடித்துள்ளார் சவுந்தரராஜா. இந்நிலையில் நடிகர் சவுந்தரராஜா தனது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

அந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சவுந்தரராஜா, அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் படி என் குடும்ப மருத்துவரின் அறிவுரைப்படி இன்று என்னுடைய முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டேன். நீங்களும் மருத்துவர்கள் அறிவுரைப்படி விரைவில் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்.
கொரானாவை ஒழிப்போம்.!! என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











