twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தப் படத்தில்தான் பேசிய சம்பளத்தைப் பெற்றிருக்கிறேன்! - ஒரு ஹீரோவின் வாக்குமூலம்

    By Shankar
    |

    சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் நடித்த, நடிகர் சௌந்தர்ராஜா இப்போது ஃபுல்டைம் ஹீரோவாகிவிட்டார். அவர் நாயகனாக நடித்துள்ள இரு படங்கள் அடுத்த வாரம் வெளியாகின்றன. அவற்றில் ஒன்று தங்க ரதம்.

    என்.டி.சி மீடியா மற்றும் வீகேர் புரொடக்ஷன் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் இது.

    மார்ச் 24 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் நடந்தது.

    Actor Soundarraraja's confession in Thangaratham audio launch

    இந்தச் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர் சிஎம் வர்கீஸ், இணைத் தயாரிப்பாளர் பினுராம் மற்றும் ஹரி, இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ, ஒளிப்பதிவாளர் ஜேக்கப் ரத்தினராஜ், கலை இயக்குநர் என் கே பாலமுருகன், பாடகர் அந்தோணி தாசன், பாடகி தேவிகா, படத்தின் ஹீரோக்கள் சௌந்தர்ராஜா, வெற்றி, நாயகி அதிதி கிருஷ்ணா, இயக்குநர் பாலமுருகன் மற்றும் படத்தை வெளியிடும் வெங்கீஸ் பிலிம் இண்டர்நேஷனல் வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    படத்தின் நாயகன் சௌந்தரராஜா பேசும் போது, "சுந்தரபாண்டியன் படத்தில் நடித்து முடித்த பிறகு இப்படத்தின் கேரக்டர் குறித்து இயக்குநர் பாலமுருகன் என்னிடம் தெரிவித்தார். இப்படத்தில் நாயகிக்கு அண்ணன் கேரக்டரில் நடிக்கிறேன். கோபக்காரனாகவும், பாசக்காரனாகவும் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறேன். இதுவரை இருபது படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படத்தில்தான், தயாரிப்பாளர் எனக்கு பேசிய சம்பளத்தை முழுதாக கொடுத்து என்னை அசத்தினார். 24 ஆம் தேதியன்று நான் நடித்த மற்றொரு படமும் வெளியாகிறது. அதனால் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறேன்," என்றார்.

    படத்தின் இன்னொரு நாயகன் வெற்றி பேசும் போது, "நான் கதையின் நாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இது. பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வதும் இது தான் முதல்முறை. இதற்கு முன் 'எனக்குள் ஒருவன்' என்ற படத்தில் ஒரு கேரக்டர் ரோலில் நடித்திருந்தேன். ஸ்ட்ராபெர்ரி படத்தில் வில்லனாக நடித்திருந்தேன். ஆனால் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறேன். கூத்துப் பட்டறை முத்துசாமிதான் என்னை பட்டைத் தீட்டிய குரு. இது மண் மணம் மாறாத கிராமத்துக் காதல் கதை.

    இப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் கே.பாக்யராஜ் பாராட்டியது எனக்கு உற்சாகத்தை அளித்தது. இந்த படத்தின் கேப்சன் 'ஏ ஜர்னி ஆஃப் ஹோப்' என்றிருக்கும். அதாவது நம்பிக்கையின் ஒரு பயணம் என்றிருக்கும். படத்தின் பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன.
    ஆடியோவிற்கு ஆதரவு அளித்தது போல் படத்திற்கும் பெரிய அளவில் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்," என்றார்.

    Actor Soundarraraja's confession in Thangaratham audio launch

    படத்தின் நாயகி அதிதி கிருஷ்ணா, இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ, தயாரிப்பாளர் சிஎம் வர்கீஸ் ஆகியோரும் விழாவில் பேசினர்.

    விநியோகஸ்தர் வெங்கடேஷ் படத்தை வெளியிடுகிறார். அவர் பேசும் போது, "தங்கரதம் படத்திற்காக நாங்கள் புதிய முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறோம். தமிழ் திரையுலகில் லேட்டஸ்ட்டாக டிக்கெட் மார்க்கெட்டிங் என்ற முறை அறிமுகமாகியிருக்கிறது. இதை நாங்களும் செயல்படுத்த எண்ணியிருக்கிறோம். இந்த படத்திற்காக தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் டிக்கெட் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறோம். முதற்கட்ட களப்பணிகளை தொடங்கியிருக்கிறோம்," என்றார்.

    இயக்குநர் பாலமுருகன் பேசும் போது, "இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர் சௌந்தரராஜா, வில்லன் கிடையாது. அவரும் ஒரு லீட் ரோலில்தான் நடித்திருக்கிறார். வெற்றியும் ஒரு லீட் ரோலில் தான் நடித்திருக்கிறார். தமிழ்நாட்டின் பெரிய காய்கறி மார்க்கெட்டாக இருக்கும் ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டில் எங்களுக்கு கமிஷன் கடை இருக்கிறது. அங்கு பெற்ற அனுபவத்தை வைத்து இந்த கதையை உருவாக்கினேன்,"என்றார்.

    English summary
    Actor Soundarraja's Thanga Ratham movie audio launch was held at Prasad lab.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X