Actor Sri: நடிகர் ஸ்ரீ.. இவரைப் போய் போதைக்கு அடிமைனு சொல்லீட்டாங்களே.. மனுசன் என்ன சொல்றாருனு பாருங்க
சென்னை: வழக்கு எண் 18/9, மாநகரம், இருகப்பற்று உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து முத்திரை பதித்தவர் நடிகர் ஸ்ரீ. இவர் ஒரு படத்தில் இருக்கிறார் என்றாலே ரசிகர்களுக்கு படத்தின் கதை மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் கடந்த வாரத்தில் இருந்து இணையத்தில் நடிகர் ஸ்ரீ குறித்த வீடியோக்களும் தகவல்களும் புகைப்படங்களும் பலருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது. இப்படியான நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் சில முக்கியமான தகவல்களை தெரிவித்துள்ளார்.
நடிகர் ஸ்ரீ குறித்து கடந்த வாரத்தில் இருந்து வேகமாக பரவிய தகவல்கள் என்றால் அது அவரது செல்ஃபி புகைப்படத்தை வைத்து தான். அதாவது அவரது புகைப்படத்தை பார்த்த மருத்துவர்கள் கூறும் போது, நடிகர் ஸ்ரீ, காசநோயால் பாதிப்பு அடைந்திருக்கலாம். காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் விலா எலும்புகள் இவ்வாறு வெளியே தெரியும். மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசி எடுக்காது என்பதால், அவர்கள் அதிகம் சாப்பிடவும் மாட்டார்கள் எனத் தெரிவித்தனர்.
மேலும் சில இணையவாசிகளும் யூடியூபர்களும், நடிகர் ஸ்ரீ, அதிகப்படியான போதைகளுக்கு அடிமையாகிவிட்டார் அதனால்தான் அவர் இப்படி உள்ளார். அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. போன் செய்தாலும் எடுக்கவில்லை. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் போன் செய்தபோது அவர் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால், நடிகர் ஸ்ரீ, தனது தாயாருக்கு மட்டும் போன் செய்துவிட்டு, அவரிடம் எதுவும் பேசாமல், அவரது குரலைக் கேட்டு விட்டு போனை கட் செய்து விடுகிறாராம்.

அதிர்ச்சி: ஆனால் நடிகர் ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ரீல்ஸ் களை வெளியிட்டு வருகிறார். அவர் அதிகப்படியான முடி வளர்த்துக் கொண்டும், அதற்கு கலரிங் செய்து கொண்டும் உள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களையும் ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டு வந்தவர், இப்படியான நிலையில்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரை நிர்வாணமாக தனது புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
போதை: அதன் பின்னர்தான் அவருக்கு என்ன ஆனது? எங்கே இருக்கிறார்? ஏன் இப்படியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. தயாரிப்பாளர்கள் அவருக்கு முறையாக சம்பளம் தாராததால்தான் நடிகர் ஸ்ரீ இப்படி ஆகிவிட்டார் என்று கூறினார்கள். மேலும் பலர், நடிகர் ஸ்ரீ, அனைத்துவிதமான போதைப் பொருட்களுக்கும் அடிமையாகி விட்டார். இனி அவரை போதையில் இருந்து மீட்கும் வேலையைத்தான் அவரது குடும்பத்தினர், நெருங்கிய வட்டாரங்கள் செய்ய வேண்டும் என தெரிவித்தார்கள்.

சிக்ரெட்: இந்த தகவல்கள் ஒருபுறம் போய்க்கொண்டு இருக்க, நடிகர் ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தானே பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது, " நான் கடந்த ஒரு ஆண்டு நான்கு மாதங்கள் மற்றும் 16 நாட்களாக சிக்ரெட் புகைப்பதில்லை. நான் அவற்றை கடந்த 2024ஆம் ஆண்டு புத்தாண்டில் இருந்தே விட்டுவிட்டேன். ( அவர் சொல்லும் கணக்குப்படி, ஒரு ஆண்டு 3 மாதங்கள் 16 நாட்கள் ஆகிறது) தெளிவு படுத்துவதற்காக இந்த வீடியோவைப் பதிவிடுகிறேன் என்று பேசியுள்ளார். மேலும் சிகரெட்டை விட்ட முதல் 90 நாட்களில் அதற்கு பதிலாக பால் கலக்காத காபியைக் குடித்தேன் எனவும், அனைவரும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இவரது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











