Actor Sri: நடிகர் ஸ்ரீ இப்போ என்ன செய்யறாரு?.. புது ஃபோட்டோ.. புது அப்டேட்.. லோகேஷ் முயற்சி வீண் போகல?
சென்னை: வழக்கு எண் 18/9, மாநகரம், இருகப்பற்று உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து முத்திரை பதித்தவர் நடிகர் ஸ்ரீ. இவர் ஒரு படத்தில் இருக்கிறார் என்றாலே ரசிகர்களுக்கு படத்தின் கதை மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் ஸ்ரீ குறித்து பரவிய வீடியோக்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. அதன் பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்க இயக்குநரும் அவரது நண்பருமான லோகேஷ் கனகராஜ் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில் நடிகர் ஸ்ரீ குறித்து தற்போது வெளியாகியுள்ள அப்டேட்டில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
நடிகர் ஸ்ரீ குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேகமாக பரவிய தகவல்கள் என்றால் அது அவரது செல்ஃபி புகைப்படத்தை வைத்து தான். அதாவது அவரது புகைப்படத்தை பார்த்த மருத்துவர்கள் கூறியது, நடிகர் ஸ்ரீ, காசநோயால் பாதிப்பு அடைந்திருக்கலாம். காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் விலா எலும்புகள் இவ்வாறு வெளியே தெரியும். மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசி எடுக்காது என்பதால், அவர்கள் அதிகம் சாப்பிடவும் மாட்டார்கள் எனத் தெரிவித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
நடிகர் ஸ்ரீ உடல்நிலை குறித்து வெளியான தகவல்களைப் பார்த்து, சில இணையவாசிகளும் யூடியூபர்களும், நடிகர் ஸ்ரீ, அதிகப்படியான போதைகளுக்கு அடிமையாகிவிட்டார் அதனால்தான் அவர் இப்படி உள்ளார். அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. போன் செய்தாலும் எடுக்கவில்லை.

லோகேஷ் கனகராஜ்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் போன் செய்தபோது அவர் போனை எடுக்கவில்லை என்றெல்லாம் அப்போது தகவல்கள் வெளியானது. அதே நேரத்தில் நடிகர் ஸ்ரீ அவ்வப்போது அவரது அம்மாவுக்கு மட்டும் போன் செய்துவிட்டு, அவரிடம் எதுவும் பேசாமல், அவரது குரலைக் கேட்டு விட்டு போனை கட் செய்து விடுகிறார் என்றும் தகவல்கள் வெளியானது.
சிக்ரெட் பழக்கம்: தன்னைப் பற்றி பலரும் அவர் போதைக்கு அடிமையாக உள்ளார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்திருந்தார். அவரது பதிலில் தான் கடந்த 2024 ஆம் ஆண்டு புத்தாண்டில் இருந்தே சிக்ரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன் என்று கூறினார். அதன் பின்னர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார் என்று கூறினார். அதன் பின்னர் எதுவும் நடிகர் ஸ்ரீ குறித்து எந்த அப்டேட்டும் வராமல் இருந்தது. இந்நிலையில் இப்போது வந்துள்ள அப்டேட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
புத்தகம்: அதாவது, நடிகர் ஸ்ரீ புத்தகம் எழுதி அதனை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புத்தகத்தை இன்று அமேசான் கெண்டிலில் வெளியிட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புத்தகத்திற்கு " MAY EYE COME IN?" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள நாவல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











