என்ன வேணும்னாலும் எழுதிக்கோங்க.. நான் சோஷியல் மீடியாவில் இல்லை.. கடுப்பான ஸ்ரீகாந்த்!
சென்னை: ரோஜா கூட்டம் படத்தில் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த், பார்த்திபன் கனவு, போஸ், நண்பன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானார். சில ஆண்டுகளாக ஸ்ரீகாந்திற்கு வாய்ப்புகளே இல்லை, தற்போது இவர் தினசரி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஹீரோயின் குறித்து வரும் விமர்சனத்திற்கு அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ.. ஐஸ் க்ரீம் சிலையே நீ யாரோ என இளசுகளை உறையவைத்த நடிகர் தான் ஸ்ரீகாந்த், தற்போது இவர் தினசரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். இதில், ஹீரோயினாக அந்த படத்தின் தயாரிப்பாளரான சிந்தியா லூர்ட்தே நடித்துள்ளார்.

இந்த படத்திலிருந்து, கடந்த மாதம் தேடி தேடி நான் கண்டேன் என்ற பாடல் வெளியானது.
அந்த பாடலைப்பார்த்த இணையவாசிகள், ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு என எப்பேர்பட்ட படத்தில் நடித்த ஸ்ரீகாந்திற்கா இந்த நிலை என்று கடுமையாக அவரை கிண்டலடித்தனர். அதுமட்டுமில்லாமல் படத்தின் ஹீரோயினை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
நடிகர் ஸ்ரீகாந்த்: இதுகுறித்து பேசிய ஸ்ரீகாந்த், தயவுசெய்து பாகுபாடு பார்ப்பதை நிறுத்துங்கள். நம் மனதில் இனவெறி அதிகமாக உள்ளது, நாம் இனவெறி பிடித்தவர்களாக இருக்கிறோம். மற்றவர்களை பாடி ஷேமிங் செய்து மகிழ்கிறோம். தயவுசெய்து அதை செய்யாதீர்கள், அது மிகவும் மோசமான செயல். எனக்கு தெரிஞ்சு மக்கள் அனைவரிடமும் அன்பு குறைந்து கொண்டே வருகிறது. அனைவரும் மற்றவர்களிடம் கொஞ்சம் அன்பு காட்டினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நான் சோசியல் மீடியாவில் இல்லை. 16 வருடத்திற்கு முன்பே நான் சோஷியல் மீடியாவில் இருந்து வெளியே வந்து விட்டேன். இதனால், என்ன வேணும்னாலும் எழுதிக்கோங்க அது என்ன பாதிக்காது.
சரியான பதிலடி: படத்தோட கதை எனக்கு ரொம்ப புடிச்சி இருந்ததால, அந்த படத்துல நான் நடிச்சிருக்கேன். ஒரு படத்துல இவங்க தான் நடிக்கணும், அவங்க தான் நடிக்கணும்னு யாரு முடிவு பண்றது, நடிக்கிற திறமை இருந்தா, யாரு வேணாலும் நடிக்கலாம். இவங்கதான் நடிக்கணும்னு நம்ம யாருடைய உரிமையிலும், தலையிட முடியாது. இது சுதந்திரமான நாடு. இந்த நாட்டுல அவங்க மனசுக்கு எது சரின்னு தெரியுதோ அதுபடி அவங்க வாழலாம். இதுல யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது.
அதுமட்டுமில்லாமல் நடிகையினா இப்படித்தான் இருக்கணும்னு ஏதாவது வரை முறை இருக்கா? நீங்க ஒரு பக்கம் நடிகை சிந்தியாவை ட்ரோல் பண்ணிகிட்டே இருக்கீங்க. ஆனா அவங்க அத பத்தி எல்லாம் கவலைப்படாம நடிப்புல தீவிரமா இருக்காங்க, ட்ரோல் பண்ற நீங்க எங்க இருக்கீங்க என்று பார்த்துக்கோங்க, என்னை பற்றி வரும் எந்த நெகட்டிவ் மீஸ் பற்றியும் நான் கவலையே படமாட்டேன் என்று, ஸ்ரீகாந்த் இணையத்தில் ட்ரோல் செய்பவர்களுக்கு காட்டமாக பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











