ஸ்ரீகாந்தின் மிருகா… ஊரடங்கு முடிந்ததும் ரிலீஸ்.. நடிகர் ஸ்ரீகாந்த் தகவல் !

சென்னை : 'மிருகா' படத்தின் வெளியீடு குறித்தும் தான் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் குறித்தும் நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
'மிருகா' படத்தின் படப்பிடிப்பு 144 தடை உத்தரவு போடும் முன்பே முடிந்துவிட்டது. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்து படம் வெளியாக தயாராகவுள்ளது. ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியதும், திரையரங்குகளில் திறக்கப்படும் என்றும், ஊரடங்கு முடிந்ததும் வெளியாகும் முதல் படமாக 'மிருகா' இருக்கும் என்று நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

Recommended Video

நான் Simbhuவ KISS பண்ணல | Harshika Blasts on fake Gossip | Un Kadhal Irundhal

Actor Srikanth has said that after the Lockdown, the film Miruka will be released.

இப்படத்தை J.பார்த்திபன் இயக்க, அருள் தேவ் இசையமைக்கிறார். B.வினோத் ஜெயின் தயாரிக்கிறார். ராய் லட்சுமி நாயகியாக நடிக்கிறார். மிருகா திரைப்படத்தில் நாயகனாக நடிக்கும் ஸ்ரீகாந்த் உடன் சந்திராமேனன், பிளாக் பாண்டி, தேவ்கில் என பல முன்னணி தமிழ் நட்சத்திரங்க நடித்துள்ளனர்.

மேலும் 'மிருகா' படத்திற்குப் பிறகு நானும், ஹன்சிகா மோத்வானியும் இணைந்து நடிக்கும் 'மஹா' படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கருணாகரன், தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கிறார்கள் என்றும், U.R.ஜமீல் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைக்கிறார். V.மதியழகன் தயாரிக்கிறார். இப்படம் துப்பறியும் திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அனைத்துப்பணிகளும் முடிவடைந்து விட்டன. படத்தின் மேல் வேலைகள் மட்டுமே உள்ளன என்று ஸ்ரீகாந்த் கூறினார்.

அதேபோல், நானும், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் இணைந்து நடிக்கும் படம் 'காக்கி'. இப்படத்தில் இரு கதாநாயகிகள். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இந்துஜாவும், எனக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகையும் நடிக்கிறார்கள். ஆனால், அவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பும் கொரோனா ஊரடங்கால் பாதியிலேயே நிற்கிறது.

'காக்கி,'வாய்மை ஆகிய படங்களை இயக்கிய செந்தில் குமார் இயக்கத்தில், கமல் கோரா, தனஞ்செயன், பிரதீப் ஜெயன் ஆகியோர் இணைந்து த தயாரிக்கிர்கள். நண்பன் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் இப்படத்தையும் ஒளிப்பதிவு செய்கிறார். அவருடன் நான் இரண்டு படங்களில் பணியாற்றியிருக்கிறேன்.

Actor Srikanth has said that after the Lockdown, the film Miruka will be released.

மேலும், இப்படத்தின் கதை சமுதாய சிந்தனையைக் கொடுக்கும் படமாக இருக்கும் என்றும் கூறினார். எனக்கும், விஜய் ஆண்டனிக்கும் சரிசமமான பாத்திரங்கள் இருக்கிறது. இவ்விரு கதாபாத்திரங்களும் மிகவும் உணர்வுபூர்வமான கதாபாத்திரங்கள் என்றும் கூறினார்.

அடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். இந்த படமும் படப்பிடிப்பு ஓரளவு முடிந்து பாதியில் இருக்கிறது என்றார். இந்த படங்களுக்குப் பிறகு இன்னும் இரண்டு படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளோம். ஆனால், 144 தடை உத்தரவால் பாதியில் நிற்கும் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, பிறகு இந்த படங்களின் படப்பிடிப்பைத் துவங்குவோம்.

Actor Srikanth has said that after the Lockdown, the film Miruka will be released.

இதில் ஒவ்வொரு படங்களிலும் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்கள் என்பது தான் எனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயமாக இருக்குறது. இவ்வாறு தான் நடித்து வரும் படங்களைப் பற்றியும் வெளியாக காத்திருக்கும் 'மிருகா' படத்தைப் பற்றியும் நடிகர் ஸ்ரீகாந்த் விளக்கமாக கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X