Srikanth: போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்... நடிகர் ஸ்ரீகாந்திடம் ரத்த பரிசோதனை!

சென்னை: போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீ காந்திடம் போலீசாரால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிரசாத் என்பவரிடம் இருந்து போதை பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் வாங்கி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்தை சென்னை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

போதை பொருள் தடுப்பு விவகாரத்தில் நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இரண்டு தினங்களுக்கு முன்பு, சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப் குமார் மற்றும் மேற்கு அமெரிக்க கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரை சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 கிராம் கொக்கைன் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில், கிளம் ஒன்றில் அறிமுகமான நபர் ஒருவரிடம் இருந்து போதைப்பொருளை வாங்கி அதை சென்னையில் பலருக்கு விற்பனை செய்ததாக பிரதீப் குமார் கூறினார்.

Srikanth police drug case
Photo Credit:

போதை பொருள் விசாரணை: அதைத் தொடர்ந்து அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முன்னாள் அதிமுக பிரமுக பிரசாத்திற்கு போதை பொருள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இவர்கள் இருவருக்கும், பெங்களூரில் வாசித்து வரும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் தான் போதைப்பொருள் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீகாந்த் கைது: அதாவது, முன்னாள் அதிமுக பிரமுகரிடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்தின் போதைப்பொருளை வாங்கி இருப்பது தெரியவந்ததை அடுத்து, சென்னை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார், நடிகர் ஸ்ரீகாந்தை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர் போதை பொருளை பயன்படுத்தியதை கண்டறியும் வகையில் அவரின் ரத்த பரிசோதனை மேற்கொள்ளுவதற்கான சம்மன் கொடுக்கப்பட்டதை அடுத்து, நடிகர் ஸ்ரீகாந்த் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஸ்ரீகாந்த்தை மீண்டும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, போதை பொருளை பயன்படுத்தினீர்களா.. விற்பனை செய்தீர்களா என இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், அவர் போதை பொருளை பயன்படுத்தியது தெரியவந்தால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சென்னையில் உள்ள கிளப் கோக்கைன் போதை பொருளை ஸ்ரீகாந்த் பயன்படுத்தியதாக தெரிகிறது. ஸ்ரீகாந்தும் நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவும் ‌ போதை பொருள் பயன்படுத்துவதை பார்த்ததாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரதீப் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த், ஏப்ரல் மாதத்தில், கனா கண்டேன், கிழக்கு கடற்கரை சாலை, பூ, துரோகி, நண்பன் ஆகிய படத்தில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X