சிம்பு-ஹன்சிகா நடிக்கும் 'மஹா'வில் இந்த ஹீரோதான் போலீஸ் கமிஷனர்... காதலை பிரிப்பாரோ?
Recommended Video
சென்னை: சிம்பு- ஹன்சிகா நடித்துள்ள மஹா படத்தில் நடிகர் ஶ்ரீகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் 'மஹா'. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜமீல்.
இவர், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் இயக்குனர் லஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

புகை பிடித்த ஹன்சிகா
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் காவி உடை அணிந்து ஹன்சிகா புகை பிடிப்பது போல் இருந்ததால் எதிர்ப்புக் கிளம்பியது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தக் கதையில் சாயாசிங், தம்பி ராமையா, நாசர், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

சிம்பு கேரக்டர்
இந்தப் படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. காதல் முறிவுக்குப் பிறகு சிம்பு - ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் இது என்பதால் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்தில் சிம்புவின் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அவர் விமானியாக நடிக்கிறார். கதையில் மாற்றம் செய்து சிம்பு கேரக்டரை அதிகமாக்கியுள்ளனர்.

கோவா விமானி
இதுபற்றி இயக்குனர் ஜமால் கூறும்போது, சிம்புவின் கேரக்டர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாவைச் சேர்ந்த ஒரு விமானியின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி அவர் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. படம் தொடங்கி நாட்களாகிவிட்டது. விமானத்தில் சிம்புவின் போர்ஷனை படமாக்க வேண்டும் என்பதால் படம் தாமதமானது' என்று கூறியிருந்தார்.

போலீஸ் கமிஷனர்
இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் ஶ்ரீகாந்த், விக்ரம் என்ற போலீஸ் கமிஷனர் கேரக்டரில் நடிக்கிறார். இவர் வரும் காட்சிகள் திரில்லாக இருக்கும் படக்குழு தெரிவித்துள்ளது. அவர் நடிக்கும் காட்சிகள் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. ஶ்ரீகாந்த் இந்த கேரக்டருக்காக அதிகம் உழைத்திருக்கிறார் என்றும் படக்குழு கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications











