Srikanth: போதையால் சீரழிந்த ஸ்ரீகாந்த்.. எப்படி வர வேண்டிய நடிகர்? பிரபலம் ஆதங்கம்!

சென்னை: சோசியல் மீடியாவில் எந்த பக்கம் திரும்பினாலும் நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் வழக்கில் கைதான செய்தி தான் தலைப்பில் இடம் பெற்று வருகின்றன. ஒரு காலத்தில் முன்னணி நடிகராக அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த ஸ்ரீகாந்த் இப்படி போதையால் அழிந்துவிட்டாரே என பிரபலம் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வசீகரமான நடிகரான ஸ்ரீகாந்த் நடித்த முதல் திரைப்படமான ரோஜா கூட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஸ்ரீகாந்தின் வெற்றிக்கு வழி வகுத்தன. முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, போஸ், பூ, உயிர் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்தார். நடிகை சினேகாவிற்கும் இவருக்கும் கெமிஸ்டிரி பக்காவாக இருந்ததால், பல படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூட செய்திகள் பரவியது.

Srikanth arrest
Photo Credit:

நடிகர் ஸ்ரீகாந்த்: பெண்களின் மனம் கவர்ந்த காதல் மன்னகாக வலம் வந்த ஸ்ரீகாந்த், ஜுட் படத்தின் அதிரடி ஆக்ஷன் ஹீரோ நடித்திருந்தார். ஆனால், அந்த படம் தோல்வியைத் தவியது. அதன் வெளியான அடுத்தடுத்த படங்களும் தோல்வி அடைந்தன. பின் பல ஆண்டுகள் கழித்து சசியின் இயக்கத்தில் பூ படம் வெளியானது அந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. இதனால்,திரையில் தென்படாமலே இருந்த ஸ்ரீகாந்த், நண்பன் படத்தில் 3வது ஹீரோவாக நடித்திருந்தார். படம் வெற்றி பெற்ற போதும், இவருக்கு வாய்ப்பு வரவே இல்லை. இதைத்தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து அண்மையில் வெளியான தினசரி படத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படத்தின் போஸ்டர் வெளியான போதே, ஸ்ரீகாந்த எப்படிப்பட்ட நடிகர் அவருக்கு சிந்தியா ஜோடியா, ஸ்ரீகாந்திற்கு வந்த வந்த நிலைமையை பார்த்தீங்களா? என்றெல்லாம் விமர்சித்துள்ளார்கள்.

ரசிகர்கள் கவலை: ஆனால், இன்று போதை பொருள் பழக்கத்தால், நீதிமன்றத்தில் நான் தவறு செய்துவிட்டேன், என் மகனை கவனித்துக்கொள்ள வேண்டும் என கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இவருக்கு இருந்த போதை பழக்கத்தால் தான் தவறான கதைகளைத் தேர்வு செய்து, நடிப்பில் மீது கவனத்தை செலுத்தாமல், இப்படி சீரழிந்து இருக்கிறார் என்று பிஸ்மி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதே போல ரசிகர்களும் எப்பேர்ப்பட்ட நடிகர் இவருக்கான இந்த நிலைமை என்றும், கூடாத நட்பு இருந்தால் இதுதான் நிலைமை என இணையத்தில் புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X