twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘லவ் யூ விஜிமா”: வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அப்டேட் கொடுத்த விஜய்யின் தோஸ்த்து படா தோஸ்த்

    |

    ஐதராபாத்: விஜய் நடிப்பில் வேகமாக உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

    வம்சி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படம் தமிழ். தெலுங்கு என இருமொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

    'வாரிசு' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விஜய்யின் நெருங்கிய நண்பர் ஒருவர் சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார்.

     யுவன் உதவி இருக்காவிட்டால் என் குடும்பமே நடுத்தெருதான்..தனுஷ் உருக்கம் யுவன் உதவி இருக்காவிட்டால் என் குடும்பமே நடுத்தெருதான்..தனுஷ் உருக்கம்

    தீபாவளியில் இருந்து தொடங்கும் வாரிசு கொண்டாட்டம்

    தீபாவளியில் இருந்து தொடங்கும் வாரிசு கொண்டாட்டம்

    விஜய்யின் 66வது படமாக உருவாகி வரும் 'வாரிசு', 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. முதன்முறையாக தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளியுடன் விஜய் கூட்டணி வைத்துள்ளதால், இந்தப் படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மேலும், இசையமைப்பாளர் தமனும் விஜய்யுடன் முதன்முறையாகக் கூட்டணி வைத்துள்ளார். இந்நிலையில், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    வாரிசு அப்டேட் கொடுத்த விஜய்யின் தோஸ்த்து படா தோஸ்த்

    வாரிசு அப்டேட் கொடுத்த விஜய்யின் தோஸ்த்து படா தோஸ்த்

    தீபாவளிக்கு வெளியாகும் வாரிசு படத்தின் முதல் பாடலை, சித் ஸ்ரீராம், ஜொனிதா காந்தி இருவரும் பாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஃபர்ஸ்ட் சிங்கிளைத் தொடர்ந்து வாரிசு, டீசர், ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து அடுத்தடுத்து சூப்பர் அப்டேட்கள் வெளியாகும் எனவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முதல் பாடல் வெளியீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வாரிசு சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சிறப்பான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை விஜய்யின் நெருங்கிய நண்பரே கொடுத்துள்ளார்.

    விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்ததில் ரொம்பவே மகிழ்ச்சி

    விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்ததில் ரொம்பவே மகிழ்ச்சி

    விஜய்யின் படங்களில் அவரது நெருங்கிய நண்பர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது வழக்கம். அவரது பெரும்பாலான படங்களில் விஜய்யின் நட்புக் கூட்டத்தைப் பார்க்கலாம். கடந்தாண்டு வெளியான 'மாஸ்டர்' படத்தில் கூட விஜய்யின் நண்பர்களான ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம் ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களில் ஸ்ரீமனும் சஞ்சீவும் விஜய்யுடன் பல படங்களில் அவரது நண்பர்களாக நடித்து மாஸ் காட்டினர். எப்போதுமே நண்பர்களை விட்டுக் கொடுக்காத விஜய், அவர்களுக்கு சரியான நேரத்தில் சான்ஸ் கொடுத்து அரவணைத்து செல்கிறார். அந்த வகையில் வாரிசு படத்தில் ஸ்ரீமனும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளது உறுதியாகியுள்ளது. இதனை அவரே மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    முதல் ஆளாக படப்பிடிப்பை நிறைவு செய்த ஸ்ரீமன்

    முதல் ஆளாக படப்பிடிப்பை நிறைவு செய்த ஸ்ரீமன்

    விஜய்யின் 'வாரிசு' படத்தில் நடித்தது குறித்து ட்வீட் செய்துள்ள நடிகர் ஸ்ரீமன், "வாரிசு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி, எப்போதும் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை நான் தவற விடமாட்டேன். நன்றி தில் ராஜூ, நன்றி இயக்குநர் வம்சி, நன்றி என் ஆருயிர் நண்பா விஜிமா, உனது ஆதரவை மறக்கவே மாட்டேன்" என க்யூட்டாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் முதல் ஆளாக வாரிசு படத்தில் ஸ்ரீமன் தனது காட்சிகளை நடித்து முடித்துள்ளது தெரியவந்துள்ளது.

    English summary
    Vijay is currently acting in Varisu movie, directed by Vamshi Paidipally, This film will release next year for Pongal. In this case, actor Sriman has tweeted that he is happy to have acted in the Varisu film with Vijay
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X