கோல்டன் ஹார்ட் மனிதர்ன்னா அது கேப்டன்தான்.. விஜயகாந்தை புகழ்ந்த பிரபல நடிகர்!
சென்னை: கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடலை புதைக்க தன்னுடைய கல்லூரியில் உள்ள இடத்தை வழங்கிய விஜயகாந்தை நடிகர் ஸ்ரீமன் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட பலரையும் சரமாரியாக தாக்கினர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் வேதனை அடைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடலை தன்னுடைய ஆண்டாள் அழகர் கல்லூரியில் அடக்கம் செய்துக் கொள்ளலாம் என அறிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் நடிகர் விஜயகாந்துக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஸ்ரீமன், விஜயகாந்தை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் பொன்னான இதயம் கொண்ட மனிதர் கேப்டன்.. நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
நடிகர் ஸ்ரீமன், விஜயகாந்துடன், வல்லரசு, வாஞ்சிநாதன், தென்னவன், எங்கள் ஆசான், அரசாங்கம், தவசி, நரசிம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜயின் நண்பரான நடிகர் ஸ்ரீமன் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











