Actor Sriman: வீட்டிற்குள் புகுந்த மழை நீர்.. வீட்டை காலி செய்த நடிகர் ஸ்ரீமன்!

சென்னை: தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், கமல் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் அவர்களுக்கு நண்பனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஸ்ரீமன். கோடம்பாக்கத்தில் உள்ள இயக்குனர் காலனியில் வசித்து வந்த இவர், வீட்டிற்குள் வெள்ளம் புகுந்து உள்ளதால்,முன்னெச்சரிக்கையாக அவர் தனது வீட்டை காலி செய்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனவும் வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்தது. தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருவதால், பல இடத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

sriman rain house

வீட்டை காலி செய்த ஸ்ரீமன்: இந்நிலையில் நடிகர் ஸ்ரீமன் தனது வீட்டை தண்ணீர் சூழ்ந்து கொண்டதால், தனது வீட்டை காலி செய்து விட்டு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இயற்கையை யாருமே கட்டுப்படுத்த முடியாது ஒரு அளவிற்கு வேண்டுமானால் தடுக்கலாம், தமிழக அரசு நல்ல பாதுகாப்பு கொடுத்து இருக்கு இருந்தாலும், எவ்வளவு மழை பெய்யும் என்பது யாருக்குமே தெரியாது. இன்று காலையில் இருந்து பெய்த மழையால், என் வீட்டிற்குள் தண்ணீர் வர ஆரம்பித்து இருக்கிறது இதனால், நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வேறு ஒரு வீட்டிற்கு செல்கிறேன்.

வேகப்படுத்த வேண்டும்: இதற்கு யார் மீதும் குறை சொல்ல முடியாது, ஆனால் மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க வேறு எதாவது செய்து இருக்கலாம். இப்போது நடந்து கொண்டு இருக்கும் வேலையை இன்னும் துரிதப்படுத்தினால், வரும் காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து அனைவரும் தப்பித்துக்கொள்ளலாம். ஏன் என்றால் இது ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ நடந்து முடிக்கும் வேலை இல்லை. இருந்தாலும், அந்த வேலையை கொஞ்சம் வேகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

குறை சொல்லவில்லை: எனக்கு வேறு ஒரு இடத்தில் வீடு இருப்பதால், அந்த வீட்டுக்கு செல்கிறேன். இதே வேறு வீடு இல்லாதவர்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்றார். குறை சொல்லவேண்டும் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம். யாராக இருந்தாலும் இந்த பிரச்சனை நடந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் இப்போது இருப்பவர்கள் நன்றாகவே வேலை செய்கிறார்கள் என்று நடிகர் ஸ்ரீமன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X