ரஜினியை விஜய்க்கு பிடித்தது.. ஆனால் இப்போ?.. ஓபனாக போட்டுடைத்த நண்பர்
சென்னை: விஜய் இப்போது ஹெச்.வினோத் இயாக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படம் அடுத்த வருடம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதேபோல் ரஜினி நடித்து முடித்திருக்கும் கூலி படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையே ஜெயிலர் படத்தின் சமயத்தில் ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் மோதல் நிலவியது. இந்நிலையில் விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத் அளித்திருக்கும் பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.
நடிகர் விஜய் கோலிவுட்டில் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர். அவரது படங்கள் வரிசையாக 100 கோடி ரூபாயை அசால்ட்டாக வசூலித்துவருகின்றன. வாரிசு, பீஸ்ட், லியோ, GOAT ஆகிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. கடைசியாக வெளியான GOAT திரைப்படம்கூட உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்வரை வசூல் செய்திருக்கிறதாக கூறப்படுகிறது.
ரஜினி Vs விஜய்: இதற்கிடையே ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் அவ்வப்போது மோதல் உச்சம் தொடுகிறது.. ரஜினிக்கு தர்பார், அண்ணாத்த படங்கள் தோல்வியை சந்தித்து வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்ததால் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று அவரது ரசிகர்கள் முஷ்டி முறுக்கினர். ஆனால் ரஜினி ரசிகர்களோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை.எப்போதுமே ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்று கூறுகிறார்கள்.

முற்றுப்புள்ளி வைத்த விஜய்: இது ஒருபக்கம் இருக்க ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன குட்டி கதை புதிய பஞ்சாயத்தை ஏற்படுத்தியது. அதனையடுத்து லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான் என கூறி இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருந்தாலும் சூப்பர் ஸ்டார் பட்டம் மீது தான் ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது என்று அப்பா - மகன் குட்டி கதையையை சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி, விஜய் படங்கள்: ரஜினி இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அப்படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அடுத்ததாக ஜெயிலர் 2 படமும் உருவாகிவருகிறது. அதேபோல் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்திருக்கிறார் விஜய். இப்படம் அடுத்த வருடம் ரிலீஸாகிறது. இந்தப் படம்தான் விஜய்க்கு கடைசி படம் என்று சொல்லப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகளை பொறுத்துதான் படங்களில் நடிப்பது குறித்து முடிவெடுப்பேன் என்று மமிதா பைஜுவிடம் ஜன நாயகன் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூறியிருக்கிறார் விஜய்.
ஸ்ரீநாத் பேட்டி: இந்நிலையில் நடிகரும், விஜய்யின் நண்பருமான ஸ்ரீநாத் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்தார். அந்தப் பேட்டியில், "எனக்கு, விஜய்க்கெலாம் படையப்பா ஆல் டைம் ஃபேவரைட். அந்த சமயத்தில் ரஜினியுடைய தீவிரமான ரசிகர் விஜய். அனைவருக்கும் அவரை விஜய்யின் படங்கள், மேனரிசம் ஆகியவைகளை விஜய்க்கு பிடிக்கும். ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் என்று விஜய்யே சொல்லிவிட்டார். அது யார் என்று உங்களுக்கே தெரியும் எனவும் சொல்லிவிட்டார். நான் தளபதி, ரஜினிதான் சூப்பர் ஸ்டார், தலைவர் என கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











