கொரோனா வைரஸ் காரணமாக.. திடீரென அபார்ட்மென்ட் செக்யூரிட்டியாக மாறிய நடிகர்.. இது புது அனுபவமாம்!

By

பெங்களூரு: கொரோனா காரணமாக, பிரபல நடிகர் ஒருவர் செக்யூரிட்டியாக மாறியுள்ளார்.

உலகை மிரட்டும் கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

இந்தியாவிலும் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தினசரி சம்பளம்

தினசரி சம்பளம்

இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தும் இந்தத் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கபட்டதால் கடந்த 4 மாதமாக பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் பெரும் பணக்கஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர். தினசரி வேலை பார்த்து சம்பளம் வாங்கும் பலரது வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

மளிகை கடை

மளிகை கடை

இதனால், பலர் தங்கள் தொழிலை மாற்றியுள்ளனர். பிரபலங்களாக இருக்கும் சினிமா நடிகர், நடிகைகளும் படப்பிடிப்புகள் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நடிகர்கள் மளிகை கடை திறந்துள்ளனர். சிலர் காய்கறிகள் விற்கின்றனர். சில நடிகர்கள் பழங்கள் விற்று வருகின்றனர். கேரளாவில் நடிகர் ஒருவர் மீன் கடை திறந்துள்ளார்.

ஶ்ரீநாத் வசிஸ்தா

ஶ்ரீநாத் வசிஸ்தா

இந்நிலையில் பிரபல கன்னட நடிகரும் இயக்குனருமான ஶ்ரீநாத் வசிஸ்தா, செக்யூரிட்டியாக மாறி இருக்கிறார். இவர், டாக்டர் சுகன்யா, மந்தனா உட்பட சில படங்களை இயக்கி உள்ளார். பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். பச்சன் என்ற படத்தில் நடிகர் நாசருக்கு டப்பிங்கும் பேசியுள்ளார். செக்யூரிட்டியாக மாறியுள்ள அவர், பிபிஇ கிட் மற்றும் தெர்மல் ஸ்கேனருடன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் செக்யூரிட்டிகளில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் இருந்த 3 செக்யூரிட்டிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதனால் குடியிருப்பு சங்கம், செக்யூரிட்டியாக பணியாற்றும்படி கேட்டுக்கொண்டது. எனது ஷிப்ட் 2 மணியில் இருந்து இரவு 10 மணி வரை. நேற்று என் மகன் செக்யூரிட்டியாக இருந்தான். இது எனக்கு புது அனுபவம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X