ஷுட்டிங் செல்வதாக சென்ற தனுஷ் பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் திரைத்துறை!

சென்னை: ஷுட்டிங் செல்வதாக கூறி சென்ற தனுஷ் பட நடிகர் வீட்டிற்கு அருகிலேயே தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்தப்படத்தில் தனுஷ் லீடிங் ரோலில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் நடித்திருந்தவர் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸவ். இந்தப் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான அவர், அதனை தொடர்ந்து யூடியூப்பில் ஒளிப்பரப்பாகி வரும் 'வல்லமை தாரோயா' என்ற நடித்து வந்தார்.

போன் ஸ்விட்ச் ஆஃப்

போன் ஸ்விட்ச் ஆஃப்

கடந்த புதன்கிழமை படப்பிடிப்புக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்ட அவர், அன்றைய நாள் முழுவதும் வீடு திரும்பவில்லை. ஷூட்டிங்கில் இருந்தால் ஸ்ரீவத்ஸவ் தனது போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிடுவது வழக்கம்.

ஷுட்டிங்கில் பிஸி

ஷுட்டிங்கில் பிஸி

இதனால் அவருடைய குடும்பத்தினர் ஸ்ரீவத்ஸவ் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதாக நினைத்துள்ளனர். ஆனால் புதன்கிழமை முழுக்கவுமே அவர் வீடு திரும்ப வில்லை போனும் ஸ்விட்ச் ஆஃபில் இருந்துள்ளது.

 சடலாமாக தொங்கிய ஸ்ரீவத்ஸவ்

சடலாமாக தொங்கிய ஸ்ரீவத்ஸவ்

இந்நிலையில் ஸ்ரீவதஸ்வ் வசிக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள அவருடைய மற்றொரு வீட்டிற்கு அவருடைய குடும்பத்தினர் சென்றுள்ளனர். அப்போது யார் எதிர்பாராத வகையில் ஸ்ரீவத்ஸவ் அந்த வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

 வியாழக்கிழமைதான் தெரிந்தது

வியாழக்கிழமைதான் தெரிந்தது

இதனைக் கண்ட குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். புதன் கிழமையே அவர் தூக்கில் தொங்கிய நிலையில் வியாழக் கிழமைதான் அவர் இறந்தது தெரியவந்துள்ளது.

 தனிமையில் இருந்து வந்துள்ளார்

தனிமையில் இருந்து வந்துள்ளார்

ஸ்ரீவத்ஸவ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வீட்டை அவரது தந்தை தனது பிஸ்னஸுக்காக பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வீட்டில் அவ்வப்போது ஸ்ரீவத்ஸவ் தனிமையில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

 இல்லாததை இருப்பதுபோல்

இல்லாததை இருப்பதுபோல்

மேலும் கடந்த சில நாட்களாகவே ஸ்ரீவத்ஸவ் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகயும் கூறப்படுகிறது. இல்லாததை இருப்பது போல நினைத்துக்கொள்ளும் ஒரு வித மனநோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது. ஸ்ரீவத்ஸவின் தந்தை ஒரு பிரபல மனநல மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X