»   »  கன்னட நடிகரைக் காதலிக்கிறாரா நித்யாமேனன்?

கன்னட நடிகரைக் காதலிக்கிறாரா நித்யாமேனன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கன்னட நடிகர் கிச்சா சுதீப் மீது நடிகை நித்யாமேனன் காதல் வசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது இருவரும் முடிஞ்சா இவனப் புடி படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. நான் ஈ படத்தின் மூலம் பிரபலமானவர் சுதீப் இவர் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தமிழ், கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் முடிஞ்சா இவனப் புடி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.


Actor Sudeep Dating with Nithya Menen?

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்து வருகிறார். நாயகியாக அறிமுகமான 10 வருடங்களில் நித்யா மேனனைப் பற்றி இதுவரை எந்தவொரு கிசுகிசுவும் வந்ததில்லை.


தற்போது சுதீப்பை, நித்யாமேனன் காதலிப்பதாகவும் இருவரும் டேட்டிங் மேற்கொண்டு வருவதாகவும் கன்னட மற்றும் தமிழ் திரையுலக வட்டாரங்களில் செய்திகள் அடிபடுகின்றன.


சுதீப்புக்கு ஏற்கனவே திருமணமாகி சான்வி (11)ஒரு பெண்குழந்தை இருக்கிறது. பிரியா என்ற பெண்ணை 2001 ம் ஆண்டு மணமுடித்த சுதீப் இந்த வருடம் ரூ.19 கோடி கொடுத்து விவாகரத்து செய்ய விண்ணப்பித்து இருக்கிறார்.


இந்நிலையில் 42 வயதாகும் சுதீப் தன்னைவிட 15 வயது குறைவான நித்யா மேனனை காதலிப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்தக் காதல் திருமணத்தில் முடியுமா? காத்திருந்து பார்க்கலாம்.

English summary
Sources Said Actress Nithya Menen Dating with Kannada Actor Kiccha Sudeep, Both are Starrer K.S.Ravikumar's Tamil and Kannada Bilingual Film Mudinja Ivana Pudi.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil