இன்னொரு பிரபல நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்க போறாராம்.. வெளியான பரபரப்பு தகவல்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னொரு பிரபல நடிகரும் கலந்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விஜேவும் நடிகையுமான அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவல் உறுதியாகி உள்ள நிலையில், இந்த பிரபல நடிகரும் கலந்து கொள்ள உள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட்கள் கிடைத்துள்ளன.

பன்னீர் புஷ்பங்கள் படத்தில் அறிமுகமாகி லக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியல் வரை நடித்து வரும் நம்ம நடிகர் சுரேஷ் தானாம்.

நாள் நெருங்குது

நாள் நெருங்குது

இன்னும் இரு வாரங்கள் மட்டுமே இருக்கிறது, தமிழ் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நம்ம பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக, இந்த கடைசி நேரத்தில் ஏற்கனவே உள்ளே வருகிறார்கள் என கருதப்பட்ட இரண்டு பிக்பாஸ் பிரபலங்களுக்கு கொரோனா பரவல் கண்டறியப்பட்ட நிலையில், புதுசா இருவரை பிக்பாஸ் நிகழ்ச்சி களமிறக்கி உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

விஜே அர்ச்சனா

விஜே அர்ச்சனா

நடிகையும் தொகுப்பாளினியுமான விஜே அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்கு வரப் போகிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி பிக் பாஸ் ரசிகர்களை உச்சகட்ட சந்தோஷத்தில் ஆழ்த்தியது. எப்போதுமே சிரித்த முகத்துடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அவர் பிக்பாஸ் வீட்டுக்கு சென்ற உடன் தனது ரியல் முகத்தை எப்படி காட்டப் போகிறார் என்பதை காணவும் ரசிகர்கள் ஆவல்.

யார் அந்த பிரபலம்

யார் அந்த பிரபலம்

இந்நிலையில், அந்த இன்னொரு பிரபலம் யார் என்பது குறித்த தகவலும் வெளியாகி ரசிகர்களை இரட்டிப்பு சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது. முன்னாள் ஹீரோ, இப்ப அப்பா வேடங்களில் நடித்து அசத்தி வரும் நம்ம நடிகர் சுரேஷ் தான் அந்த போட்டியாளர் என்கிற அட்டகாசமான அப்டேட் கிடைத்து இருக்கிறது.

நடிகர் சுரேஷ்

நடிகர் சுரேஷ்

1981ம் ஆண்டு வெளியான பன்னீர் புஷ்பங்கள் படத்தில் அறிமுகமான நடிகர் சுரேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. கடைசியாக ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடித்த இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தில் அப்பா வேடத்தில் நடித்திருந்தார்.

வேறலெவல் போட்டி

வேறலெவல் போட்டி

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பிக்பாஸ் சீசன் போட்டியாளர்கள் ஒவ்வொரு பெயரும் டைட்டிலை நான் தான் பா எடுத்துட்டு போகப் போகிறேன் என்பது போல வெளியாகி ரசிகர்களை குழப்ப நிலைக்கு ஆளாக்கி இருக்கிறது. யாருக்கு சப்போர்ட் செய்வது, யாருக்கு ஆர்மி அமைப்பது என்ற நிலையில் உள்ளனர். நிச்சயம் கடுமையான போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதை போலவே

அதை போலவே

நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் தெலுங்கு பிக்பாஸ் ஏற்கனவே தொடங்கி வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்குகள் சூப்பராகவும் கடுமையாகவும் இருப்பதை போலவே, இந்த ஆண்டு பிக்பாஸ் தமிழ் சீசன் 4லும் டஃப் போட்டிகள் மற்றும் டாஸ்க்குகள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் விஜய் டிவிக்கு ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss 4 Rules & Regulation | Contestants Quarantine • Kamal Hassan
ஏன் லேட்

ஏன் லேட்

மேலும், இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், வரும் அக்டோபர் 4ம் தேதி நிகழ்ச்சி தொடங்குவது உறுதியாகி உள்ள நிலையில், ஏன் அடுத்த புரமோவை பிக்பாஸ் குழு வெளியிட இவ்வளவு லேட் செய்கிறது என்ற குற்றச்சாட்டையும் நெட்டிசன்கள் விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ பிக்பாஸ் அறிவிப்பு ட்வீட்களுக்கு கீழே எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X