வடிவேலுவை போன்று நடிப்பதாக கூறி அவருடைய ஆட்கள் அடித்தார்கள்.. நடிகர் பகீர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: வடிவேலுவை போன்று நடிப்பதாக கூறி அவருடைய ஆட்கள் தன்னை அடித்ததாக பிரபல நடிகர் பகீர் கிளப்பியுள்ளார்.
சினிமாவில் நாள்தோறும் பல்வேறு சுவாரசிய சம்பவங்களும், பல்வேறு படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது.
படத்தின் பூஜை, பாடல்கள் வெளியீடு, டீஸர், ட்ரெயிலர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. அவற்றில் சுவாரசியமான தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

புதிய பாலிவுட் படத்தில்..
அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் நடிகர் துல்கர் சல்மான் புதிதாக இந்தி படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ள தகவலை கூறியுள்ளார் பிகே. அதாவது பால்கி இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம் துல்கர் சல்மான். இந்தப் படத்தில் சன்னி லியோன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு சுப் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் பிகே.

அண்ணாத்த அப்டேட்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த படம். இந்தப் படத்தில் நடிகைகள் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், சத்தியன், வேல ராமமூர்த்தி என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் அப்டேட்டுகள் குறித்தும் பல்வேறு சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார் பிகே.

வடிவேலுவின் ஆட்கள் அடித்தனர்
இதேபோல் காதல் படத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் சுகுமார், நடிகர்கள் பலர் நிஜ வாழ்வில் நல்லவர்களாக இருப்பதில்லை என கூறியுள்ளார். தன்னை சந்திக்க வேண்டும் என்று அழைத்த நடிகர் வடிவேலு, தான் அவரைப் போல் நடிப்பதாக கூறி மிரட்டினார் என்றும் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அவருடைய ஆட்கள் தன்னை அடித்ததாகவும் கூறி பகீர் கிளப்பியுள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே.

ஓ மணப்பெண்ணே
இதேபோல் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானிஷங்கர் நடிப்பில் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியான ஓ மணப்பெண்ணே படம் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. இந்தப் படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியிருந்தார். தெலுங்கில் வெளியான பெல்லி சூப்புலு என்ற படத்தின் ரீ மேக் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய கதாப்பாத்திரத்தில் கவுதம்
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் நடிகர் சூரியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடிப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இயக்குநர் கவுதம் மேனனும் அந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அதாவது நடிகர் சூரிக்கு உயர் அதிகாரியாக நடிக்கிறாராம் கவுதம் மேனன்.


Click it and Unblock the Notifications