நடிகர் சுமனுக்கு இன்று 61வது பிறந்த நாள்.. திரையுலகம் திரண்டு வாழ்த்து !

சென்னை : தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது மிடுக்கான நடிப்பின் மூலம் திரையுலகத்தை இன்று வரை ஆட்டிப் படைத்து வரும் நடிகர் சுமன் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை.

Recommended Video

'Jayam' Suman Shetty யின் தற்போதைய நிலை? | 7G Rainbow Colony

1980களில் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய சுமன் இன்றுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகராக இருந்து வருவதோடு வெங்கடேஸ்வரா, ராமா, சிவா உள்ளிட்ட பல கடவுள் கதாபாத்திரங்களில் மிகக் கச்சிதமாகப் பொருந்த கூடியவர்.

எக்கச்சக்கமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த சுமன் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப் படுத்திருப்பார். இவ்வாறு இவர் நடித்த பல கதாபாத்திரங்கள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஆகஸ்ட் 28 ஆம் தேதியான இன்று இவர் தனது 61வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி மகிழ்வித்து வருகின்றனர்.

போலீஸ் அதிகாரியாக

போலீஸ் அதிகாரியாக

நடித்த முதல் திரைப்படத்திலேயே போலீஸ் அதிகாரி வேடத்தில் வந்து அனைவருக்கும் காட்சியளித்த சுமன், தொடர்ந்து இன்றுவரை பல்வேறு திரைப்படங்களில் மிடுக்கான அதே நடையில் மிரட்டும் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்

200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்

1979ல் தமிழில் வெளியான "நீச்சல் குளம்" என்ற திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய சுமன், இளமை கோலம், வீட்டுக்கு வீடு வாசப்படி, டார்லிங் டார்லிங் டார்லிங், கடல் மீன்கள், அஞ்சாத நெஞ்சங்கள் என இன்றுவரை கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

லீட் ரோலில்

லீட் ரோலில்

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான சுமன் தெலுங்கில் மட்டும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் லீட் ரோலில் நடித்ததோடு, தமிழ், மலையாளம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் இன்றுவரை அனைவரையும் ரசிக்க வைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து தென்னிந்திய திரைப்படத்துறையில் ஒப்பற்ற நடிகராக விளங்கி வருகிறார்.

மிரட்டும் வில்லனாக

மிரட்டும் வில்லனாக

பெரும்பாலும் கதாநாயகன் கதாபாத்திரங்களிலும் கடவுள் கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வந்த சுமன் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்து அசத்தி இருப்பார். சிவாஜி திரைப்படம் இவருக்கு வேறு விதமான தோற்றத்தை கொடுக்க அதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருப்பார்.

61வது பிறந்தநாள்

61வது பிறந்தநாள்

இவ்வாறு தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் எண்ணற்ற திரைப்படங்களில் முன்னணி கதாநாயகனாக கொடிகட்டி பறந்த நடிகர் சுமன் ஆகஸ்ட் 28 ஆம் தேதியான இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி பல்வேறு திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி மகிழ்வித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X