கவர்ச்சியான ஆடைகள் விஷயத்தில் சில்க் ஸ்மிதா தான் சரி.. இன்றைக்கு அப்படி இல்லை.. குண்டைத் தூக்கிப்போட்ட சுமன்

சென்னை: தெலுங்குத் திரை உலகில் கடந்த சில தினங்களாக பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிகழ்வு, நடிகர் சிவாஜியின் சர்ச்சைக்குரிய கருத்துக்களும், அதற்கு நடிகை அனசுயா பரத்வாஜ் அளித்த காரசாரமான பதிலடியும் தான். அண்மையில், நடிகைகள் சமந்தா மற்றும் நிதி அகர்வால் ஆகியோர் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது கூட்டத்தில் சில தொல்லைகளை சந்தித்தனர். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியே சிவாஜியின் கருத்துக்கள் வெளியாகின.

நடிகைகளின் உடை குறித்த அவரது கருத்துக்கள் கடும் விமர்சனங்களை சந்தித்தன. சிவாஜி, "உடலை வெளிப்படுத்தும் உடைகளை எந்த நடிகையும் அணிய வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து சேலையோ அல்லது உடல் முழுவதையும் மறைக்கும் உடல்களையோ அணியுங்கள். உடல் பாகங்களை வெளிப்படுத்துவதில் அல்ல, முற்றிலும் மறைக்கும் உடையிலோ அல்லது சேலையிலோ தான் அழகு இருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.

Actor Suman comparison dressing silk smitha and now days Actress
Photo Credit:

இந்நிலையில், தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள மூத்த நடிகர் சுமன், இந்த விவாதம் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் சிவாஜியின் கருத்துக்களுக்கு ஆதரவாகவே பேசினார். திரைப்பட வாழ்க்கைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு நடிகைகள் ஆடை அணிய வேண்டும். சிவாஜி சொன்ன அனைத்தையும் நான் முழுமையாக ஒப்புக் கொள்ளவில்லை. சில விஷயங்களில் எனக்கு மாற்று கருத்துக்கள் உண்டு. அவர் பயன்படுத்திய வார்த்தைகள் சரியாக இல்லை. அதற்காக அவர் ஏற்கனவே மன்னிப்பு கேட்டு விட்டார்" என்று சுமன் தெரிவித்தார். இருப்பினும், இந்த விவாதத்தை வேறு ஒரு கோணத்தில் அணுக வேண்டும்.

சில்க் ஸ்மிதா: சில்க் ஸ்மிதா, ஜெயமாலினி, விஜயலலிதா போன்ற மூத்த நடிகைகள் மற்றும் நடனக் கலைஞர்களை உதாரணமாகக் காட்டி சுமன் தனது கருத்தை விளக்கினார். அவர்கள் திரையில் தைரியமாகவும், கவர்ச்சியாகவும் தோன்றியிருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் தங்கள் உடை விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தனர். எளிமையான, உடலை அதிகம் வெளிப்படுத்தாத உடைகளையே அவர்கள் அணிந்தார்கள்.

Actor Suman comparison dressing silk smitha and now days Actress
Photo Credit:

சினிமாவும், நிஜ வாழ்க்கையும் வேறுபட்டவை என்பதையும், கலைஞர்கள் இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும் . முந்தைய காலங்களில் கலைஞர்கள் சினிமாவை ஒரு ஒழுக்கத்துடனும், தொழில்முறையுடனும் கையாண்டார்கள். எந்த வகை ஆடைகள் எங்கு பொருத்தமானது என்பதை அறிந்திருந்தார்கள். மெச்சூரிட்டியும் சரியான வழி காட்டுதலும் முக்கியம் என்றும், குறிப்பாக இளம் தலைமுறையினர் இத்தகைய புரிதலை பொதுவாக காலப்போக்கில் மட்டுமே பெறுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். சுமனின் இந்தக் கருத்துக்களும் வெளியான பிறகு, இந்த விவாதம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

ரசிகர்கள் ரியாக்‌ஷன்: 1980-90களில் தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் அதிகம் நடித்த நடிகைகளில் ஒருவர் சில்க் ஸ்மிதா. தனது வசீகரமான பார்வையினாலும், கவர்ச்சியான உடல்மொழியினாலும் ஸ்மிதா விரைவிலேயே ரசிகர்களின் மனதை வென்றார். சினிமா மற்றும் புகைப்படங்களுக்காக கவர்ச்சியான உடைகளை அணிந்த போதிலும், சில்க் ஸ்மிதா பொது மேடைகளில் கவர்ச்சியான ஆடைகளில் தோன்றியதில்லை. அதனால்தான் சுமன், சில்க் ஸ்மிதாவை உதாரணமாகக் கூறியிருக்கக் கூடும் என்றும் சில இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X