கூட்டமெல்லாம் ஓட்டா மாறாது.. சென்சார் இருக்கிறதே வேஸ்ட்.. குருவி வில்லன் கோச்சா இப்படி சொல்லிட்டாரே!

சென்னை: ரஜினிகாந்தின் தீ, சிவாஜி தி பாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் சுமன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல நூறு படங்களில் நடித்துள்ளார். விஜய் நடித்த குருவி படத்தில் வில்லன் கோச்சா கதாபாத்திரத்திலும் சுமன் மிரட்டினார். தஞ்சாவூரில் உள்ள திருநாகேஸ்வரன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்த சுமனிடம் எழுப்பட்ட கேள்விகளுக்கு மனதில் பட்டதை அப்படியே கூறியுள்ளார்.

ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் வழக்கு கூட அப்படியே நிலுவையில் இருக்கிறது. வழக்கு எப்போது முடிவுக்கு வருவது படம் எப்போ வெளியாவது என ஏகப்பட்ட சிக்கல்கள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.

Actor Suman talks about Vijay s Political entry and Jana Nayagan Censor issues

தவெக தலைவர் விஜய் ஜனநாயகன் படத்தின் ரிலீஸில் கவனத்தை செலுத்துவதை விட தற்போது தேர்தலில் மட்டுமே அதிக கவனத்தை செலுத்த வேண்டும் என உழைத்து வருகிறார். இந்நிலையில், விஜய்யுடன் நடித்த சுமன் சென்சார் பிரச்னை குறித்தும் தேர்தல் குறித்தும் தனது கருத்துக்களை பேசியுள்ளார்.

700 படங்களில் நடித்த சுமன்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் இந்தி என சுமார் 10 மொழிகளில் இதுவரை 700க்கும் அதிகமான படங்களில் நடித்த பிரபலமான நடிகர் சுமன் தமிழில் ரஜினிகாந்த், விஜய் அஜித், கார்த்தி என ஏகப்பட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தீ, சிவாஜி தி பாஸ், குருவி, ஏகன் உள்ளிட்ட பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநாகேஸ்வரம் கோயிலில் தரிசனம்

தஞ்சாவூரில் உள்ள திருநாகேஸ்வரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நடிகர் சுமனை சந்தித்த பத்திரிகையாளர்கள் அவரிடம் ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்னை குறித்தும் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் எழுப்பிய கேள்விகளுக்கு மனதில் பட்டதை அப்படியே பளிச்சென பேசியுள்ளார். அவரது கருத்துக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கடைசி நேரத்தில் கூட மாற்றம் வரலாம்

விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது. ஆனால், ஒரு முறை வரும் கூட்டம் அடுத்த முறை குறையாமல் அதிகரித்துக் கொண்டே போனால், அந்த பிரபலத்தின் பலம் அதிகரித்து வருவதாகவே கருதப்படும். கடைசி வாரத்தில் நடக்கும் நிகழ்வுகள், தலைவர்களின் அரசியல் பேச்சுக்கள், அவர்கள் செய்யும் செயல் உள்ளிட்டவை கூட மக்களின் மனதை மாற்றும். அண்ணா, எம்ஜிஆர், கலைஞர், என்டிஆர் என தனது 50 வருட திரை வாழ்க்கையில் பல ஆளுமைகளின் அரசியல்களை பார்த்துள்ளேன். இளைஞர்கள் ஒரு மாதிரி முடிவு செய்வார்கள், நடுத்தர வயது உடையவர்கள் ஒரு மாதிரி சிந்திப்பார்கள், என்னைப் போன்ற சீனியர் சிட்டிசன் நமக்கு இந்த ஆட்சி வந்தால் என்ன லாபம் என்பதை பார்ப்பார்கள் என்று பேசினார்.

சென்சார் இருப்பதே வேஸ்ட்

அந்த காலத்தில் மக்கள் சினிமாவை தியேட்டருக்கு சென்று மட்டும் தான் பார்த்தார்கள். ஆனால், இப்போ கையில் இருக்கும் மொபைலில் கண்ட கண்ட படங்களை சிறுவர்கள் பார்க்கின்றனர். வெப்சீரிஸ்களில் எதுவுமே சென்சார் ஆகாமல் வருகிறது. தடை விதிப்பது நல்ல விஷயம் தான். ஆனால், அது அனைவருக்கும் சமமாக இருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும். என்னை கேட்டால், சென்சார் போர்டு இந்த காலத்தில் இருப்பதே வேஸ்ட் தான் என பதில் அளித்துள்ளார். முன்னதாக இயக்குநர் ராம் கோபால் வர்மாவும் இதே போன்ற கருத்தை பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X