ஏமாற்றினர்.. படங்கள் தொடர் தோல்வியால் வெளிநாட்டுக்கு பயந்து ஓடிவிட்டேன்: நடிகர் ஓபன் டாக்!
சென்னை: தான் நடித்த படங்கள் அனைத்தும் தொடர்ந்து தோல்வியடைந்ததால் வெளிநாட்டுக்கு பயந்து ஓடிவிட்டதாக இளம் நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர் சந்தீப் கிஷன். இவர் வாரணம் ஆயிரம் படத்தில் கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
பின்னர் செல் போன் லு பேலன்ஸ் என்ற பாடலை பாடியதன் மூலம் தெலுங்கில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து தெலுங்கில் சினேக கீதம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

பாதிப் படங்கள் தோல்வி
இதைத்தொடர்ந்து தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்ததால் தெலுங்கில் பிஸியான நடிகராக இருந்தார். ஆனால் அவர் நடித்த படங்களில் பாதிக்கும் மேற்பட்ட படங்கள் தோல்வியை சந்தித்தன.

நரகாசுரன்
தமிழிலும் யாருடா மகேஷ், மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் நரகாசுரன், கண்ணாடி, கசடதபற ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஏமாற்றிவிட்டார்கள்
இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் சந்தீப் கிஷன், தனது படங்கள் தோல்வியடைந்ததால் 14 படங்களுக்கு சம்பளம் கொடுக்காமல் தயாரிப்பாளர்கள் ஏமாற்றிவிட்டதாக கூறினார். வெற்றி பெற்ற படங்களுக்கு கூட சம்பளம் கொடுக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார் சந்தீப் கிஷன்.

வெளிநாட்டுக்கு ஓடிவிட்டேன்
மேலும் தனது படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால் பயந்துபோய் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டதாகவும் சந்தீப் கிஷன் கூறியுள்ளார். 2 வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை என்று கூறிய சந்தீப் கிஷன், தற்போது திரும்பி வந்ததும் மீண்டும் பட வாய்ப்புகள் வந்ததால் நடிக்க தொடங்கியிருக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











