இதை சொல்ல எனக்கு எந்த வெட்கமும் இல்லை.. விஜய்யை விமர்சித்ததால் சர்ச்சை.. நடிகர் பதிலடி!
சென்னை: நடிகர் விஜய்யை விமர்சித்து சர்ச்சைக்குள்ளான பிரபல நடிகர் நெட்டிசன்களின் ட்ரோலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் சந்தீப் கிஷன். தெலுங்கு சினிமாவை தொடர்ந்து இந்தியிலும் அறிமுகமானார்.
தமிழில் மறந்தேன் மன்னித்தேன் என்ற படத்தின் மூலம் என்ட்ரி ஆனார். தொடர்ந்து யாருடா மகேஷ், மாநகரம் நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நரகாசுரன்
தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள சந்தீப் கிஷன், தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நரகாசுரன் மற்றும் கசட தபற ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

விஜய் குறித்த சர்ச்சை பேச்சு
இந்நிலையில் விஜய்யின் சுறா படம் ரிலீஸ் ஆன போது விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்திருந்தார். இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்தனர்.

விஜய்யை புகழ்ந்து
அதன்பிறகு விஜய்யின் பிறந்தநாளில் விஜய்யை புகழ்ந்தும் பாராட்டியும் டிவிட்டியிருந்தார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் அப்படி ஒரு பேச்சு இப்படி ஒரு பேச்சு என அவரை விமர்சித்தும் மீம்ஸ்களை வெளியிட்டும் ட்ரோல் செய்து வந்தனர்.

நிரூபிக்க வேண்டியதில்லை
இந்நிலையில் தன்னைப் பற்றிய ட்ரோல்களுக்கு பதிலளித்துள்ளார் சந்தீப் கிஷன். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, இதை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை.. ஆனால் என்னுடைய வார்த்தைகளை நான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தோன்றியது.
Recommended Video

விஜய் சாரை பிடிக்கும்
இந்தப் பதிவை எடுத்து வைத்துக் கொண்டு என்னிடம் எப்போது வேண்டுமானால் கேளுங்கள். அப்போதும் நான் இந்த கருத்தில் தான் உறுதியாக இருப்பேன். எனக்கு விஜய் சாரை மிகவும் பிடிக்கும். அவர் பல கடினமான தருணங்களில் என்னை பலவழிகளில் ஊக்கப்படுத்தியுள்ளார்.

வெட்கப்பட ஏதுமில்லை
இதில் வெட்கப்பட ஏதுமில்லை. விஜய் சார் படங்களை ரசித்தே நான் வளர்ந்தேன். இடைப்பட்ட காலங்களில் ஒரு வழக்கமான சினிமா ரசிகனாக தொலைந்து போனேன். ஆனால் இன்று கடந்த 10 ஆண்டுகளாக அவருடைய பயணம் எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது என்று பெருமையுடன் சொல்வேன்.

மீண்டும் ட்ரோல்
இன்று நான் அவருடைய மிகப்பெரிய ரசிகனாக இருக்கிறேன்" என சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது இந்தப் பதிவையும் பார்த்து ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.


Click it and Unblock the Notifications











