twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னடா இது..எலக்ட்ரிசிட்டி மீட்டரா..ஆட்டோ ரிக்ஷா மீட்டரா.. சுந்தீப் கிஷான் கலக்கல் ட்விட்!

    |

    ஹைதராபாத் : தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறையில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருபவர் சுந்தீப் கிஷான். இவர் தமிழில் மாநகரம், மாயவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

    சமீபத்தில் இவர் நடித்து வரும் A1 எக்ஸ்பிரஸ் படத்திற்காக வெறித்தனமாக மெருகேற்றிய தனது கட்டுடல் போட்டோக்களை பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியபடுத்தி வந்தார்.

    இந்நிலையில் தற்போதுள்ள லாக்டவுன் சூழலில் பல பிரபலங்களும் தங்களது வீடுகளில் மின்சார கட்டணம் அதிகமாக உள்ளது என கூறி வரும் நிலையில் தற்பொழுது சந்தீப் கிஷனும் சந்தித்து வருவதாக கிண்டலுடன் ட்விட் ஒன்றை போட்டுள்ளார்.

    ஹைதராபாத் வா சில் பண்ணலாம்.. நடிகையை மிஸ் பண்ணும் பிரபல நடிகர்.. பகிரங்க அழைப்பு! ஹைதராபாத் வா சில் பண்ணலாம்.. நடிகையை மிஸ் பண்ணும் பிரபல நடிகர்.. பகிரங்க அழைப்பு!

    நடிகர் பிரசன்னா

    நடிகர் பிரசன்னா

    கடந்த சில நாட்களாகவே பல திரைப்பிரபலங்கள் தங்களது வீடுகளில் மின்சார கட்டணம் வழக்கத்தைவிட மிக அதிகமாக வந்துள்ளது என தங்களின் ஆதங்கங்களை சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வந்த நிலையில் முதலில் நடிகர் பிரசன்னா அதிக மின்சார கட்டண கொள்ளை பற்றிய ஒரு பதிவை தொடங்கி வைத்தார்.

    லாக்டவுன் நேரத்தில்

    லாக்டவுன் நேரத்தில்

    அவரைத் தொடர்ந்து மும்பை மற்றும் டெல்லியில் வசித்து வரும் பிரபல பாலிவுட் திரை பிரபலங்களாகிய டாப்ஸி பன்னு, ரேணுகா ஷஹானே, விர் தாஸ் மற்றும் எமிரா தாஸ்துர் ஆகியோரும் தங்களது வீடுகளில் மின்சார கட்டணம் இந்த லாக்டவுன் சமயத்தில் அதிகமாக வந்துள்ளது என மின்சார துறையை சமூக வலைத்தளங்களில் மூலம் சாடி வந்தனர்.

    அதானி எலெக்ட்ரிசிட்டியை

    அதானி எலெக்ட்ரிசிட்டியை

    இதைத்தொடர்ந்து தமிழ் நடிகையும் நடிகை ராதாவின் மகளுமாகிய கார்த்திகா நாயரும் சில நாட்களுக்கு முன்பு தனது மும்பை வீட்டின் மின்சார கட்டணம் இந்த லாக்டவுனில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு லட்ச ரூபாய் வந்துள்ளது என அதானி எலெக்ட்ரிசிட்டியை கேள்வி கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

    ஆட்டோ ரிக்ஸா மீட்டரா

    ஆட்டோ ரிக்ஸா மீட்டரா

    இவ்வாறு பல பிரபலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மின்சாரக் கட்டணக் கொள்ளையைப் பற்றி பகிரங்கமாக தங்களது சமூக வலைதளங்களில் சொல்லி கோபப்பட்டு வரும் நிலையில் நடிகர் சுந்தீப் கிஷான் எலெக்ட்ரிசிட்டி மீட்டரை ஆட்டோ ரிக்ஸா மீட்டருடன் ஒப்பிட்டு மின்சார துறையை கலாய்த்து ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

    ஆன்லைனில் போட்டி

    ஆன்லைனில் போட்டி

    எங்கள் வீட்டில் உள்ள எலெக்ட்ரிசிட்டி மீட்டர் நான் சிறுவயதில் வழக்கமாக போகும் ஆட்டோ ரிக்ஸாவின் மீட்டரை போல கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது எனவும், என்னடா இது பில்லு!! அடுத்தது யார் வீட்டுக்கு அதிகமாக பில் வந்திருக்கிறது என அனைவரும் ஆன்லைனில் போட்டி போட்டுக் கொண்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மின்சாரக் கட்டணங்கள் வார இறுதியில் வெளியாகும் புதிய படங்களை போல உள்ளது என தனது பாணியில் கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    மாறிமாறி ட்விட்

    மாறிமாறி ட்விட்

    தற்பொழுது சுந்தீப் கிஷான் மற்றும் நிக்கில் சித்தார்த்தா இருவரும் டிக் டாக் செயலியை இந்தியாவில் தடைசெய்யப்பட்டதை பற்றி மாறிமாறி போட்டுள்ள ட்விட் பதிவுகளும் தற்பொழுது வைரலாகி வருகிறது.

    English summary
    Actor sundeep kishan compares electricity bill to auto meter
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X