For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  A1 எக்ஸ்பிரஸ் படத்திற்காக..11 கிலோ வரை எடையை குறைத்த சுந்தீப் கிஷான் !

  |

  ஹைதராபாத் : சிரித்த முகமும் மெச்சும் அழகும் கொண்டு தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் சுந்தீப் கிஷான்.

  இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது டுவிட்டரில் ஒரு வெயிட் லாஸ் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  அந்த போட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள் தரமான சம்பவம் ஒன்று காத்திருக்கிறது என சந்தோசத்தில் திளைத்துள்ளனர்.

  டெண்டுக்குள் ஆண் நண்பருடன் நிர்வாண கோலத்தில் பிரபல நடிகை.. பரபரப்பை கிளப்பும் பகீர் போட்டோ!டெண்டுக்குள் ஆண் நண்பருடன் நிர்வாண கோலத்தில் பிரபல நடிகை.. பரபரப்பை கிளப்பும் பகீர் போட்டோ!

  தொடர் காதல் கதைகள்

  தொடர் காதல் கதைகள்

  தொடர்ந்து காதல் கதைக்களம் கொண்ட படங்களில் தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் நடித்து வரும் சுந்தீப் கிசன் தற்பொழுது நடிக்க கையில் எடுத்திருக்கும் கதை ஒரு அத்லட் சம்பந்தப்பட்ட ஒரு கதையாகும். அதற்கு தகுந்தார்போல் இருக்கவேண்டும் என்பதற்காக தனது உடலை வருத்தி கொண்டு எடையை குறைத்து வருகிறார்.

  மாஸ்டர்

  மாஸ்டர்

  கார்த்தியை வைத்து கைதி என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்துவிட்டு, இப்போது நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான மாநகரம் என்ற படத்தின் மூலம் இவர் நேரடி தமிழ் படத்தில் நடிக்க தொடங்கியவர் இப்போது பல்வேறு படங்களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்ட் கட்டி நடித்து வருகிறார்.

  A1 எக்ஸ்பிரஸ்

  A1 எக்ஸ்பிரஸ்

  இந்நிலையில் 2019ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் தமிழில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற நட்பே துணை என்ற படம் தெலுங்கு ரீமேக் தயாராகி வருகிறார். இந்தப் படம் ஹாக்கி விளையாட்டு பற்றியும் அதில் நடக்கும் மைதான அரசியல் பற்றியும் பேசும் படமாகும். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தற்போது சுந்தீப் கிஷான் நடித்து வரும் படத்திற்கு A1 எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. அதற்காக தற்போது தனது உடல் எடையை சுமார் 11 கிலோ வரை குறைத்துள்ளார்.

  11 கிலோ எடை குறைந்துள்ளது

  11 கிலோ எடை குறைந்துள்ளது

  இதை பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்ட ஒரு பதிவில் "11 கிலோ குறைந்துள்ளது, இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது" என தனது அடுத்த படத்திற்காக அத்லெட் லுக்கிற்கு தயாராகி வருவதை மகிழ்ச்சியாக தெரிவித்து வந்தார். இதை கேட்ட அவரது ரசிகர்கள் A1 எக்ஸ்பிரஸ் படம் வெறித்தனமாக இருக்க போகிறது என மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

  கசடதபற

  கசடதபற

  மேலும் இவர் தமிழில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகி வந்த நரகாசூரன் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் சில பல காரணங்களால் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டு வருகிறது. இது ஒரு புறமிருக்க தமிழ் திரைத்துறையில் பேண்டஸி படங்களை இயக்குவதில் முக்கியமான இயக்குனராக வளம் வரும் சிம்புதேவன் இயக்கத்தில் ஆன்தாலஜி படமாக உருவாகும் கசட தபற என்ற படத்தில் சாந்தனு பாக்கியராஜ், ஹரிஸ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினா, விஜயலட்சுமி, வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி பல இளம் கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்துவருகிறார்.

  ஆன்தாலஜி படம்

  ஆன்தாலஜி படம்

  மேலும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான் பல முன்னணி இசையமைப்பாளர்களும், பல முன்னணி ஒளிப்பதிவாளர்களும் ஒன்றாக இணைந்து இந்த படத்தில் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு பல இளம் கதாநாயகர்கள் இளம் இசையமைப்பாளர் என்ன ஒரு பெரிய நட்சத்திர குடும்பமே இணையும் இந்தப் படத்தின் வெளியிட்டை எதிர்நோக்கி பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இவர் A1 படத்திற்காக உடலை இளைத்து வருகிறேன் என பதிவிட்டுள்ளது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

  English summary
  Actor Sundeep Kishan has shared a slim look photoshoot
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X