'தர்பார்' நடிகர் சுனில் ஷெட்டி வீட்டிற்கு சீல் வைத்த மும்பை மாநகராட்சி.. பரபரப்பு தகவல்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டியின் வீட்டிற்கு மும்பை மாநகராட்சி சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் சினிமாவில் கோலொச்சி வருகிறார்.
பெரும்பாலும் காமெடி படங்களில் நடித்து வரும் சுனில் ஷெட்டி இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மிரட்டல் வில்லனாக
தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தார் சுனில் ஷெட்டி. இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

சுனில் ஷெட்டி வீட்டிற்கு சீல்
இந்நிலையில் நடிகர் சுனில் ஷெட்டி வசித்து வரும் வீட்டிற்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நடிகர் சுனில் ஷெட்டி, மும்பை அல்டாமவுண்ட் சாலையில் உள்ள பிரித்திவி அப்பார்ட்மென்ட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

கொரோனா தொற்று
தற்போது அக்குடியிருப்பில் வசித்து வரும் சிலருக்கு கொரொனா தொற்று பாதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பெரும் பரபரப்பு
நடிகர் சுனில் ஷெட்டி மற்றும் அவரது குடும்பத்தினரும் நலமுடன் இருப்பதாக மும்பை மாநகராட்சி கமிஷனர் பிரசாந்த் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். நடிகர் சுனில் ஷெட்டி வசிக்கும் அப்பார்ட்மென்ட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல மொழி படங்கள்
நடிகர் சுனில் ஷெட்டி ஏராளமான பிலிம் ஃபேர் விருதுகளை குவித்துள்ளார். பாலிவுட் மட்டுமின்றி தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் மராத்தி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications