Sunil: என்ன இவ்வளவு எளிமையா இருக்காரு.. ரஜினி குறித்து பாராட்டிய பிரபல தெலுங்கு நடிகர்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீடு கடந்த வாரத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது படத்தின் ட்ரெயிலரும் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.

படத்தின் இசை வெளியீட்டில் ரஜினி பேசிய பேச்சு, மிகப்பெரிய சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

Actor Sunil impressed and hails Actor Rajinikanth in Jailer movie

நடிகர் ரஜினி குறித்து பாராட்டிய தெலுங்குப்பட நடிகர்: நடிகர் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து உருவாகியுள்ள ஜெயிலர் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் சிறப்பான வசூலை தந்தது.

ஜெயிலர் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடத்தில் பான் இந்தியா படமாக ஜெயிலர் வெளியாகவுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஜெயிலர் படத்தின் ட்ரெயிலர் மற்ற மொழிகளிலும் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக ரஜினி நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ரஜினியின் மகனாக வசந்த் ரவி நடித்துள்ளார். படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

ரஜினியின் ஜோடியாக இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். படையப்பா படத்தை தொடர்ந்து இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. படத்தில் நடிகர் சுனில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் கொடுத்துள்ள பேட்டியொன்றில் ரஜினி போன்ற எளிமையான மனிதரை தான் இதுவரை சந்தித்ததில்லை என்று பாராட்டு தெரிவித்துள்ளார். ரஜினியிடம் கற்றுக் கொள்வதற்கு அதிகமான விஷயங்கள் உள்ளதாகவும் சுனில் கூறியுள்ளார்.

Actor Sunil impressed and hails Actor Rajinikanth in Jailer movie

ரஜினியின் ஆரா மிகவும் சிறப்பானது என்று தெரிவித்துள்ள சுனில், தனக்கும் ரஜினிக்கும் இடையிலான காம்பினேஷன் காட்சிகள் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தமன்னா, ரெடின் மற்றும் வைபவ் சகோதரர் சுனில் ஆகியோருடனும் தன்னுடைய காம்பினேஷன் காட்சிகள் உள்ளதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் குறித்தும் சுனில் தன்னுடைய பேட்டியில் பாராட்டியுள்ளார்.

நெல்சன் திலீப்குமாரின் டாக்டர் படம் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டடித்ததாக பாராட்டு தெரிவித்த சுனில், அவரது காமெடி டைமிங் வேறு லெவலில் உள்ளதாகவும் பாராட்டியுள்ளார். அவர் தனியான காமெடி உலகத்தில் பயணிப்பதாகவும் அவை எளிமையாக இருந்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவதாகவும் சுனில் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தில் சுனில் கேரக்டரும் முக்கியமானதாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X